அந்தரங்கம் அறிவோம் : அவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறாரோ, வேறு யாருடனேனும் தொடர்பு இருக்குமோ?

February 14, 2016

 நான் அடிக்கடி உன்னுடன் கதைப்பதில்லை’ என்று சொல்
கிறார். 


கேள்வி: எனக்கு வயது 19. என் காதல னுக்கு 24. நாங்கள் ஒரு வருடமாகக் காதலிக்கிறோம். அவர் எமது காதல் விவகாரத்தை அவரது வீட்டில் கூறி விட்டார். அவர்கள் சம்மதித்தும் விட்டனர். நான் இன்னும் வீட்டில் சொல்ல
வில்லை. என் காதலனுக்கு, நான் படித்து ஆசிரியையாக வரவேண் டும் என்று ஆசை. அவருக்கு அனேக வேலைப்பளு இருப்பதால், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேசுவார். அப்போதும், ‘நீ நன்றாகப் படிக்க வேண் டும்.

அதற்காகத்தான் நான் அடிக்கடி உன்னுடன் கதைப்பதில்லை’ என்று சொல்
கிறார். ஆனால், இது எனக்கு மன உளைச் சலைக் கொடுக்கிறது. அவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறாரோ, வேறு யாருடனேனும் தொடர்பு இருக்குமோ, அதனால்தான் என்னை தவிர்க்க முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. என் மனம் ஆற ஒரு ஆலோசனை தருவீர்களா?


பதில்: ஆண்- பெண் இருபாலரிடம் இத்தகைய குணாதிசயம் காணப்படும் என்றாலும், அனேக பெண்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

தன்னைக் காதலிப்பவன் தன்னை ஆராதிக்க வேண்டும், கொண் டாட வேண்டும், தன்னை ஒரு இளவரசியாகப் பார்க்க வேண்டும், தனக்கு வேண்டிய, தனக்குப் பிடித்த அனைத்தையும் அவன் செய்துதர வேண்டும் என்று பல பெண்களும் நினைக்கிறார்கள். திரைப்படங்கள் கூட இத்தகைய ஒரு உணர்வுத் தூண்டலுக்குக் காரணமாக அமைகின்றன.

ஆனால், நடைமுறையில், காதலை வேண் டும் பருவங்களில் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறான, பெண்கள் மனதைக் கவரும் நடவ டிக்கைகளில் ஈடுபட்டாலும், அந்தக் காதல் கைகூடியதும் அவர்களுள் ஒரு மாற்றம் வந்து விடுகிறது.

சிலர் குறிப்பிட்ட பெண் மீது தோன்றும் மோகத்தைத் தீர்த்துக்கொண்டதும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இன் னும் சிலர், தான் எதிர்பார்த்த காதல் கைகூடியதுமே, அந்தக் காதலைத் திருமணம் வரையும் திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை வரையும் இனிமையாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிடுகிறார்கள்.

இதனால், காதல் கைகூடியதும் அவர்களிடம் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

ஏறக்குறைய உங்களது விடயத்தில் நடந்திருப்பதும் அது
தான்.

ஏனெனில், அவர் உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளாததற்குக் காரணம் அவரது அதீத வேலைப் பளு என்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறது.

மேலும், அவர் உங்களை ஒரு ஆசிரியையாக ஆக்கிப் பார்க்க விரும்புகிறார். இதன் மூலம், திருமணத்தின் பின், உங்களுக்கு ஒரு பொருளாதார உறுதித் தன்மையை ஏற் படுத்தித் தர விரும்புகிறார்.

 அதேவேளையில், உங்கள் இருவரது திருமண வாழ்க்கையில் பொருளாதாரம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார்.

மேலும், பெண்களுக்குப் பெரிதும் உகந்ததான தொழிலான ஆசிரிய சேவையை அவர் உங்களுக்காகத் தெரிவு செய்திருப்பதன் மூலம், உங்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பு மிக்க, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வசதி யானதுமான ஒரு வேலையையும் அவர் தெரிவு செய்தி ருக்கிறார்.

இதன் மூலம், உங்களது நன்மை கருதியே அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக் கிறார் எனத் தெரிகிறது.

எல்லா வற்றுக்கும் மேலாக, உங்களது காதலரது வீட்டில் உங்கள் திருமணத்துக் குப் பச்சைக்கொடி காட்டியும் விட்டனர்.

எனவே, அவர் உங்களை மறுதலிக்க வாய்ப்பு கள் மிக மிகக் குறைவு.

எனவே, தேவையற்ற சந்தேகங்களைக் களைந்துவிட்டு, சிறந்ததொரு வாழ்க்கைத் துணை உங்களுக்குக் கிடைத்தி ருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக உங்கள் கல்விப் பயணத் தைத் தொடருங்கள்.