அந்தரங்கம் அறிவோம் : என் தோற்றத்தைக் கண்டு நான் ஆரோக்கியம் குன்றியவளோ என்று எண்ணி என்னை மறுத்துவிடுவார்களோ

February 15, 2016

உறவினர், நண்பர்கள் மத்தியில் நான் கேலிப்பொருள் ஆகிவிடுகிறேன். இது என் மனதை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.

கேள்வி: எனக்கு வயது 20. நான் மிகவும் மெலிவாக இருக்கிறேன். எனது முகம், கை, கால்கள் அனைத்தும் மெலிந்து காணப்படு கின்றன. இதனால், உறவினர், நண்பர்கள் மத்தியில் நான் கேலிப்பொருள் ஆகிவிடுகிறேன். இது என் மனதை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கிவிடுகிறது. விரைவில் எனக்குத் திருமணம் செய்துவைக்கவும் வீட்டில் பேச்சு நடத்திவருகிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரும் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைப் பெண் பார்க்கவிருக்கிறார்கள். ஆனால், என் தோற்றத்தைக் கண்டு நான் ஆரோக்கியம் குன்றியவளோ என்று எண்ணி என்னை மறுத்துவிடுவார்களோ என்ற பயமும் எனக்கும் என் குடும் பத்தவருக்கும் இருக்கிறது. நான் குண்டாக மாற என்ன வழி?

பதில்: உங்கள் வேதனை விளங்குகிறது. மெலிந்த உடல்
வாகை மாற்றிக் கொள்வதற்கு உணவுக் கட்டுப்பாடு ஒன்றே தீர்வு. மேலும், ‘பூஸ்டர்’ என்று பொதுவில் குறிப்பிடப்படும் மேலதிக சத்துப் பொருட்களும் உங்களுக்கு உதவும்.

ஆனால், மிகச் சரியானதை நீங்கள் தெரிவு செய்து கொள்வது அவசியம்.

உடலைக் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப் பதிலும் பால், சோயாபால், அத்திப் பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம்.
 
காலை முதல் இரண்டு மணித் தியாலங்களுக்கு ஒரு கோப்பை பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

பாலை லேசாகச் சுட வைத்தால் போதும். சீனி சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

மூன்றாவது நாள் முதல், ஒரு மணித் தியாலத்துக்கு ஒரு கோப்பை வீதம் பால் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம்.

ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும் இது தவிர, விற்றமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், புஷ்டியான தோற்றத்தைப் பெற முடியும்.

கல்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீ ஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட், விற்றமின் டி அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரதம் அதிகம் உள்ள சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண் பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும்.

இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, கடலை முதலியவை உங்களுக்கு உதவும்.