அந்தரங்கம் அறிவோம் :அண்மைக்காலமாக எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன்.

February 15, 2016

இது சரியா? இதனால், திருமணத்தின் பின் குழந்தைப் பேற்றில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

கேள்வி:
நான் ஒரு பெண். எனக்கு 29 வயது. இன்னும் திருமணமாகவில்லை. அண்மைக்காலமாக எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா? இதனால், திருமணத்தின் பின் குழந்தைப் பேற்றில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

கேள்வி: நான் ஒரு ஆண். எனக்கு வயது 20. என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால், சுய இன்பத்தை நாடுகின்றேன். இதற்கு நீங்கள்தான் ஒரு முடிவு தரவேண்டும்.

பதில்: ஆண்- -பெண் ஆகிய வேறுபாட்டைத் தவிர, உங்கள் இருவரது பிரச்சினையும் ஒன்றே. எனவே உங்களுக்கான பதிலும் ஒன்றே.
இதில் பிரச்சினை ஒன்றும் இல்லையே... இந்த வய தில் உணர்ச்சிகளுக்கு வடிகால் சுய இன்பம்தான். இது இயல்பானதுதான். மேலும், ஒரு பெண் 29 வயது வரை திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், அவருக்கு சுய இன்பம் ஒன்றே சரியான வடிகால். சுய இன்பம் சரியானதுதான் என்றாலும், சுய இன்பத்துக்காக நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் உங்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றனவே அன்றி, இது தவறென்று நினைப்பதுதான் தவறு.
ஒரு பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் குழந்தைப் பேற்றுக்குத் தடை ஏற்படும் என்ற எண்ணமும் தவறானதே.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் வாகு இருக்கும். மேலும், ஒவ்வொருவரது உணவுப் பழக்கங்களும் வித்தியாசப்படும். இதன் அடிப் படையிலேயே உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இருக்கும். அதற்காக, சுய இன்பத்திலேயே மூழ்கிப்போய்விட வேண் டும் என்பதில்லை. 
அதீத வேலைப்பளுவால் சிலரது உணர்ச்சிகள் கட்டுப்
படுத்தப்படுகின்றன. அதிக நேரம் உபரியாக, சும்மா இருந் தால் உணர்ச்சிகள் தலைதூக்க ஆரம்பிக்கும். உங்களது நிலை என்னவென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை, உங்களுக்கு அதிக நேரம் உபரியாகக் கிடைக்குமானால், அந்த நேரத்தை வேறு எதிலேனும் செலவிட முயற்சியுங்கள். நண்பர்கள் சந்திப்பு, வீட்டு வேலைகளில் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வது, ஏதேனும் ஒரு குறுகிய காலக் கல்வித்திட்டத்தில் இணைந்து படிப்பது, கலைகளில் ஆர்வம் இருக்கும் பட்சத் தில் அதில் கவனத்தைச் செலுத்துவது என்று உங்களை எப்போதும் பரபரப்பான சூழலில் வைத்துக்கொண்டால், உணர்ச்சிகள் தலைதூக்குவது குறை யும்.
இவற்றை விடுத்து, மிகக் கடுமை யாக உணர்ச்சிகளுக்குத் தடைபோட முயற்சித்தால், நித்திரையில் விந்து வெளி யேறிவிடும். அல்லது, பெண்களைப் பொறுத் தவரையில் வெள்ளைப்படுதல் மற்றும் மனச் சிக்கல்களை உருவாக்கி விடும்.