அந்தரங்கம் அறிவோம் : வைத்தியர், எனது உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறுகின்றார். இதனால், தாம்பத்திய வாழ்க்கை இனிக்கவில்லை.

February 16, 2016

அந்தரங்கம் அறிவோம் : ​  இறுக்கமான உள்ளாடைகளை நீண்டநேரம் அணிந்தபடி இருப்பதால் இந்தப் பிரச்சினை தோன்ற வாய்ப்புகள் உள்ளன...மேலும், வயதும் வளமையும் இருக்கும்போதே இன்பத்தை நுகர்வதே சிறந்தது. 

கேள்வி: எனது வயது 48. எனது மனைவிக்கு 37. பிள்ளைகள் இருவர் உள்ளனர். நான் பலசரக்குக் கடை ஒன்றை நடத்தி வருகின்றேன். எனது ஆணுறுப்பு தற்போது சிறுத்து வருகின்றது. பருமனும் குறைந்துள்ளது. வைத்தியரை நாடினேன். அவர், எனது உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறுகின்றார். இதனால், தாம்பத்திய வாழ்க்கை இனிக்கவில்லை. உதவி செய்வீர்களா?

பதில்: பிரச்சினை உங்கள் உடலில் அல்ல, உங்கள் தொழி லில்தான் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் அதுதான் உண்மை.

பொதுவாக, இறுக்கமான உள்ளாடைகளை நீண்டநேரம் அணிந்தபடி இருப்பதால் இந்தப் பிரச்சினை தோன்ற வாய்ப்புகள் உள்ளன. உங்களது தொழிலைப் பொறுத்தவரையில், தினமும் அதிகாலை முதல் இரவு வரை உள்ளாடை அணிந்தபடியே நீங்கள் வேலை செய்து வர வேண்டியிருக்கும். இதனால் இந்தப் பிரச்சினை தோன்றியிருக்கலாம்.

மேலும், பலசரக்குக் கடையைப் பொறுத்தவரையில், எந்நேரமும் கடைபற்றியும், வாடிக்கையாளர்கள் பற்றி யுமே சிந்திக்க வேண்டியிருப்பதாலும், மனதளவிலும் உறவின் மீதான ஆர்வம் மிக நீண்ட நேரத்துக்கு எழாதி ருக்கலாம்.

அதே தருணத்தில் வயது செல்லச் செல்ல ஆணுறுப்பு சிறுத்துவிடும் என்பது உண்மையல்ல.

எனவே, நம்பிக்கையான ஒருவரை வேலைக்கு அமர்த்திவிட்டு, வேலை நேரத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். 

காதலும், காமமும் சொல்லி வருவதில்லை.

அவை இயல்பாக எழுவதற்கான சந்தர்ப்பத்தை நாம்தான் உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.

எனவே, சந்தர்ப்பம் பார்த்து கடையிலேயே அதிக நேரத்தைச் செலவிடாது, அவ்வப்போது வீட்டுக்குச் சென்று வர முயற்சி செய் யுங்கள். வயதும் வளமையும் இருக்கும்போதே இன்பத்தை நுகர்வதே சிறந்தது.