அந்தரங்கம் அறிவோம் : உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படிச் சரி செய்வது?

February 17, 2016

விந்து வெளியேற வில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.​

கேள்வி:  எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை.

ஆனால் சுய இன்பத்தின்போது பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படிச் சரி செய்வது?

பதில்: உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள்.

ஒரு ஆனால் முப்பது நிமிடத்திற்கு மேல் உறவில் ஈடுபட்டும், விந்து வெளியேற வில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.
இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு.

அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள். 

மன ரீதியான பிரச்சனைகளில் பல வகைகள் இருக்கின்றன.உங்கள் மனைவி அழகில்லை என்று நீங்கள் கருதுவது, தூக்கமின்மை, உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள், அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை, பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல், உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம், உங்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதா என மனப் பிராந்தி.

உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது, மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma), சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப்படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கெட்ட விடயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது, உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது எனப் பல பிரச்சினைகளும் உங்களது இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.

இவற்றில் உங்களுடைய பிரச்சினை எது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் பிரச்சினையை அடையாளம் கண்டுகொண்ட பின்னர், உறவின் போது அந்தப் பிரச்சினை தோன்றாவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொருளாதாரப் பிரச்சினைகள் ஒரு நொடியில் தீர்ந்து விடப்போவதில்லைதான்.

ஆனால், அதற்காக அதைப் பற்றி மட்டுமே சிந் தித்துக்கொண்டிருந்தால், வாழ்க்கை நிச்சயமாகக் கசக் கத்தான் செய்யும்.

ஆண்கள் பலரும், தங்களது உறவுச் செயற்பாடு களால் தம் மனைவியர் திருப்தி அடை வதில்லை என்ற எண்ணத்துடனேயே படுக்கையறைக்குச் செல்கிறார்கள். இன்னும் சிலரோ, படுக்கை அறைப் பக்கம் போகவே தயங்குகிறார்கள்.

ஆனால், தன்னம்பிக்கையுடன் களத்தில் குதித்துவிடுவதோ இந்தப் பிரச்சினைக்கு முக்கால்வாசித் தீர்வைத் தந்துவிடும்.

உங்கள் விருப்பத்தை மட்டுமன்றி, மனைவியின் விருப்பத்தையும் கேட்டறிந்துகொண்டு, அவருடன் இணைந்து இன்பம் துய்க்க முயலுங்கள். ஏனெனில், உறவில் இருவருக்கும் சம பங்கு இருக்கிறது.

இதில் எங்கே குளறுபடி இருந்தாலும், தாம்பத்தியம் ருசிக்காது.