அந்தரங்கம் அறிவோம் :இரண்டு நாட்கள் கழித்து, தான் ஒரு திருநங்கை என்று அவர் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. என் காதலைக் கைகழுவிவிடவும் முடியவில்லை

February 18, 2016

 நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளலாமா? அப்படித் திருமணம் செய்துகொண்டால், என்னால், மற்றவர்களைப் போலவே வாழ முடியுமா?

கேள்வி: நான் அண்மையில் அலுவலக ரீதியாகத் தமிழகத்துக்குச் சென்றுவந்தேன். அங்கே ஒரு பெண்ணுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல். உண்மையில், அவரைப் பார்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவரை விரும்பத் தொடங்கிவிட்டேன். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, தான் ஒரு திருநங்கை என்று அவர் சொன்னார்.

என்னால் நம்ப முடியவில்லை. என் காதலைக் கைகழுவிவிடவும் முடியவில்லை. நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளலாமா? அப்படித் திருமணம் செய்துகொண்டால், என்னால், மற்றவர்களைப் போலவே வாழ முடியுமா?

பதில்: திருநங்கைகளை, மற்றவர்கள் தான் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களோ, தங்களைப் பெண்களாகவே உணர்கிறார்கள்.

ஒரு சாதாரண பெண்ணுக்கு இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அவர்களுக்கும் இருக்கிறது. எனவே, தாமும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. 

எப்போது ஒரு ஆண் தன்னைத் திருநங்கையாக வெளிப்படுத்துகிறாரோ, அப்போதே அவர்கள் தத்தமது வீடுகளில் இருந்து விரட்டப்படுகிறார்கள்.

விதி
விலக்குகளும் உண்டு. அப்படி விரட்டப்பட்டவர் கள், தமது வாழ்நாள் முழுதும் தனிமையான உணர்வுடனேயே வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அதிலி ருந்து விடுபட்டு, குடும்பமாக இணைந்து வாழ வேண்டும் என்ற ஒரு இயல்பான ஆசை அவர்களுக்குள்ளும் நிரம்பி வழியத்தான் செய்யும்.

திருநங்கைகளைத் திருமணம் செய்து கொண்டு வாழும் பலர் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களைவிட அவர்கள் அதிக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலில் உறவினர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள்.

அடுத்து, நீங்கள் சார்ந்து வாழும் சமூக ரீதியான நெருக்கடிகள். மூன்றா வது, உங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள்.

இந்த மூன்றையும் சமாளிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அவரை நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ளலாம்.

உங்கள் கேள்வியில் உணர்த்தப்படும் இன்னொரு செய்தி, திருநங்கையைத் திருமணம் செய்து கொண்டால், உங்களது பாலியல் ரீதியான தேவைகளை அவரால் திருப்தி செய்ய முடி யுமா என்பதே. ஒரு பெண்ணிடம் நீங்கள் அடையக்கூடிய திருப்தியை நிச்சய மாகத் திருநங்கைகளிடம் முழுமையாக அடைய முடியாது.

குழந்தைகள் பெற்றுக்கொள் ளவும் முடியாது. என்றாலும், பெண்களைவிடவும் அதிக அன்பையும், அன்னியோன்யத்தையும், பாசத்தையும் பெற முடியும்.

எனவே, திருநங்கையைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாக, இந்த நடைமுறைச் சிக்கல்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.