அந்தரங்கம் அறிவோம் : கடந்த வாரம் உறவின்போது விந்துடன் சேர்ந்து இரத்தமும் வெளியானது. எதனால் இந்த நிலை என்று தெரிந்துகொள்ள முடியுமா?​

February 17, 2016

புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இதைக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. 

கேள்வி: எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் உறவின்போது விந்துடன் சேர்ந்து இரத்தமும் வெளியானது. ஆனால், இதை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. எதனால் இந்த நிலை என்று தெரிந்துகொள்ள முடியுமா?

பதில்: சற்றும் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதே நல்லது.

ஒன்று, உங்கள் ஆணுறுப்பின் முனையும், அடிப் பகுதியும் இணையும் பகுதியில் உள்ள தோல் இணைப்பு அறுந்திருக்கலாம்.

இது சாதாரணமானதே. இதன்போது வெளியாகும் இரத்தம், தானாகவே வெளியே வரும் அளவுக்கு அதிகமாக இருக்காது. எனவேதான், விந்துவுடன் கலந்து வெளிவருகிறது.

மற்றொன்று, சில வேளைகளில், புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இதைக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு நீங்கள் உங்களை உட்படுத்திக்
கொண்டால், தொல்லைகளைத் தவிர்க்கலாம்.