அந்தரங்கம் அறிவோம் : எனக்குத் தலைகீழ். எனக்கு விந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், என் மனைவி உறவுக்குத் தயங்குகிறார்.

February 19, 2016

திருமணமான புதிதிலும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான நிலை தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு. 

கேள்வி: 
அந்தரங்கம் பகுதியில் பல தடவைகள், விந்து விரைவாக வெளியேறுவதை ஒரு கேள்வியாகப் பார்த்தி ருக்கிறேன். எனக்குத் தலைகீழ். எனக்கு விந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், என் மனைவி உறவுக்குத் தயங்குகிறார்.

இதற்கு என்ன செய்யலாம்?

பதில்:  உங்கள் வயது மற்றும் உங்களுக்குத் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் என்பது பற்றிய விபரங்கள் இல்லை.

அந்த விபரங்கள் உங்கள் பிரச்சினைக்கான தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை மறவாதீர்கள்.

திருமணமான புதிதிலும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான நிலை தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு. இந்தப் பிரச்சினைக்கு மனதின் அதாவது எண்ணங்களின் உதவி தேவைப்படுகிறது.

யதார்த்தத்தில் எவ்வாறு இருந்தாலும், மனதில் கிளர்ச்சியூட்டக்கூடிய காட்சிகளை உருவகிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினை தீரும்.

அப்படி இல்லையேல், உணர்வெய்தும் வரையில் உறவின் வேறு நிலைகளைக் கையாளலாம்.

அல்லது, உங்கள் மனைவி உணர்வெய்தியபின் நீங்கள் சுயமாகவே விந்தை வெளியேற்றலாம். ‘கொக் ரிங் வைப்ரேட்டர்’ என்ற ஒரு சாதனம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர் களா? இது ஒரு மெல்லிய அதிர்வூட்டும் வளையம்.

இதை, உங்கள் மர்ம உறுப்பின் நுனிப்பகுதியில் பொருத்துவதன் மூலமும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். எனினும், இத்தகைய உபகரணங்கள் இலங்கையில் கிடைக் கின்றனவா என்பது சந்தேகமே.

அப்படியே கிடைத்தாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.