அந்தரங்கம் அறிவோம் : இன்னும் சொல்வதானால், அதில் கிடைக்கும் சந்தோஷம் மனைவியிடம் கூட எனக்குக் கிடைப்பதில்லை. இது தவறா?

February 19, 2016

 வருடங்கள் செல்லச் செல்ல, மிகச் சிலருக்கு சலிப்புத் தட்டும். அவர்கள், கற்பனை உலகில் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள். 


கேள்வி: எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன் னமும் சுய இன்பப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.

இன்னும் சொல்வதானால், அதில் கிடைக்கும் சந்தோஷம் மனைவியிடம் கூட எனக்குக் கிடைப்பதில்லை. இது தவறா?

பதில்: இல்லை. திருமணமான புதிதில், மனைவியுடனான உறவு திருப்தியும் சந்தோஷமும் தரலாம்.

ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல, மிகச் சிலருக்கு சலிப்புத் தட்டும். அவர்கள், கற்பனை உலகில் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு, புதிதாக ஒருவர் தேவைப்படலாம்.

அதில் பல சிக்கல்கள் இருப்பதனால், சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

இவ்வாறான நிலையில், கற்பனையில் தனக்குப் பிடித்த ஒருவருடன் உறவு கொள்வதாக எண்ணங்களை வடிவமைத்துக் கொள்வதால், ஒப்பீட்டு ரீதியில் உங்களுக்கு அதிக சந்தோஷத்தை உணர்கிறீர்கள்.

நீங்களும் இத்தகையவராக இருந்தால், தாராளமாக இரண்டையுமே மேற் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை. 

ஆனால், சுய இன்பப் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டீர்களானால், மனைவியு டனான உறவு உங்களுக்கு நிச்சயமாக அதே பழைய சந்தோஷத்தை மீட்டுத் தரும்.