அந்தரங்கம் அறிவோம் : எனக்கு வயது 19. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரும் 3, 4 தடவை உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

February 24, 2016

பொதுவாக ஆண்களுக்கு எத்தனை நிமிடங்களில் விந்து வெளியேறும்? எனக்கு ஏதும் நோய் இருப்பதால் இப்படி ஆகிறதா?

கேள்வி: எனக்கு வயது 19. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இருவரும் 3, 4 தடவை உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அவ்வாறு இணையும்போது எனக்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் விந்து வெளியேறுகிறது.

சுய இன்பத்தின்போதும் இதே நிலைதான். பொதுவாக ஆண்களுக்கு எத்தனை நிமிடங்களில் விந்து வெளியேறும்? எனக்கு ஏதும் நோய் இருப்பதால் இப்படி ஆகிறதா?

பதில்: பதற வேண்டாம். உங்களுக்கு ஒரு பிரச்சி னையும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான ஆண் களுக்கு இதே நிலைதான். இது இயல்பானதே. 

ஆனால், உங்கள் இருவர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையாலேயே உங்கள் இருவரது வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருமணத்துக்கு முன், அதுவும் இந்தச் சின்ன வயதிலேயே உங்களது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக்கொண்டால், இன்னும் இரண்டு வருடங்கள் உங்கள் காதல் உயிர் வாழுமா என்ற சந்தேகம் எழுகிறது.

எந்த ஒரு சந்தோஷத்தையும் அடைந்தபின், அதைத் தாண்டி என்ன இருக்கிறது என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் எழவே செய்யும். காதலுக்கும், காமத்துக்கும்கூட இது பொருந்தும்.

இந்த வயதிலேயே உடல் இன்பம் இருவருக்கும் கிடைத்துவிட்டால், வெகு விரைவிலேயே பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு சலிப்பு வந்துவிடும்.

அதுவும் உங்கள் திருமணத்துக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

எனவே, உடலுறவைத் தொடர்ந்தீர்களேயானால் உங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடலாம்.

உங்களுக்குத்தான் உங்கள் வீட் டாரின் சம்மதம் கிடைத்துவிட்டதே! இனி என்ன கவலை? இந்த இரண்டு ஆண்டுகளும் காதலைக் கண்களாலும் வார்த்தைகளாலும் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதுவே உங்கள் உறவு நிலைக்க ஒரு உன்னத வழி!