அந்தரங்கம் அறிவோம் : எனக்கு 24 வயது. நான் ஒரு பெண்.இவ்வாறான சூழலில் திருமணம் செய்துகொண்டால் முதலிரவில் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று பயமாக இருக்கிறது. ​

February 25, 2016

இது இயல்பானது. இதன்மூலம் உங்களுக்கு எதுவித பிரச்சினையும் வரப்போவதில்லை.

கேள்வி: எனக்கு 24 வயது. நான் ஒரு பெண். எனக்கு வீட்டில் திருமணம் பேசி வருகிறார்கள். நான் ஒரு வருடத்துக்கு முன் சுய இன்பத்தில் பல முறை ஈடுபட்டிருக்கிறேன். இதனால் எனது கன்னித்திரை விலகியிருக்குமா என்று சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறான சூழலில் திருமணம் செய்துகொண்டால் முதலிரவில் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று பயமாக இருக்கிறது. இதனால் பயத்துடனேயே திருமணத்தை நோக்கியிருக்கிறேன்.


பதில்: பெண்கள் சுய இன்பம் காண்பதற்கு கன்னித்திரை வரை போகவேண்டியதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் கன்னித்திரை பாதிக் கப்பட்டிருக்குமோ என்ற உங்களது அச்சம் தேவையற்றது. மேலும் இது இயல்பானது. இதன்மூலம் உங்களுக்கு எதுவித பிரச்சினையும் வரப்போவதில்லை.
 
ஒருவேளை, சுய இன்பத்தின்போது நீங்கள் அதிக மான தூண்டலுக்கு ஆளாகியிருந்தால் அதேயளவு தூண் டல்தான் உங்களுக்கு உச்சபட்ச இன்பத்தைத் தரும்.

அதற்கு நிகரான தூண்டலை உங்கள் கணவரால் செய்ய முடிந்தால் நல்லது.

அப்படியல்லாத பட்சத்தில் அவரை அந்த அளவுக்கு தூண்டச் செய்வது உங்கள் பொறுப்பு.