அந்தரங்கம் அறிவோம் :என்னால் அவரை மறக்க முடியாது. திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவருடன்தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

February 26, 2016

எமது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன்தான் நடக்கவேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?​

கேள்வி:
நான் ஒரு பெண். வயது 21. நான் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவள். நான்கு வருடமாக இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரை விரும்புகிறேன். எமது காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. வேற்று சமயத்தவர்கள் என்பதால் திருமணத்தை எதிர்க்கிறார்கள்.

என்னால் அவரை மறக்க முடியாது. திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவருடன்தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஆனால் எமது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன்தான் நடக்கவேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்: இன்றைய காதலர்கள் பலரும் காதல் சுகமானது என்றே நம்புகிறார்கள். காதல் சுகமானதுதான்.

ஆனால் அது கைகூடும் நேரத்தில் உங்களைப் போலவே பல சங்கடங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாக வேண்டி வரத்தான் செய்யும். 

காதலுக்கு சாதி, மதம், அந்தஸ்து தேவையில்லை என்ற கூற்று சரியா, தவறா என்பதை ஒருபுறம் வைத்துவிடுங்கள்.

ஆனால் குடும்பம் என்று வரும்போது இவையனைத்தும் நிச்சயமாகத் தேவைப்படும். காதலிக்கும் பருவத்தில் இதுபோன்ற சாதி, மத வேற்றுமைகள் பெரிதாகத் தெரி வதில்லை.

ஆனால், திருமணம் ஆகி அவர் வீட்டுக்குச் சென்று, உங்கள் வணக்க முறைகள், சம்பிரதாயங்கள் என் பனவற்றை விட்டுக்கொடுத்து அவரது சமயம் சார்ந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ளும்போது நிச்சயம் சங்கடங்களை நீங்கள் உணரவே செய்வீர்கள்.

அதேவேளை, அவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி ஏற்பட்டால், உங்கள் வீட்டில் நீங்கள் கடைப்பிடிக்கும் ஆசார, அனுட்டானங்களை அவர் கடைப்பிடிப்பாரா என்பது சந்தேகமே.

இந்த நிலையில் உங்களது பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இவையனைத்தையும் தாண்டி, உங்களுக்குத் திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டபின், பிரச்சினைகள் இன்னும் மோசமாகலாம். தங்கள் பேரப் பிள்ளைக்கு ஞானஸ்நானம் செய்ய உங்கள் பெற்றோர் விரும்பலாம்.

அதை உங்கள் கணவர் வீட்டார் மறுக் கலாம். இந்தக் கையறு நிலையில் நீங்களும் உங்கள் கணவரும் என்ன முடிவை எடுப்பீர்கள்?

எந்த முடிவு எடுத்தாலும் அது ஒருபக்கச் சார்பான முடிவாகவே அமையும். இதனால் உறவுகளுக்குள் விரிசல் விழும்.

பாடசாலைக்குச் செல்லும் உங்கள் பிள்ளை, அங்கு சைவ சமய பாடத் தைப் பயில்வதா அல்லது கிறிஸ்தவ சமயத்தைப் பயில் வதா என்றொரு பிரச்சினை எழும்.

அதற்கு என்ன முடிவு எடுப்பது என்பதில் உங்கள் இரு தரப்புப் பெற்றோரினது தலையீடு வரும். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் நீங்களும் குழம்பிவிடுவீர்கள்.

தற்போதைய நிலை யில் உங்களுக்கு வேண்டு மானால் இதுபோன்ற பிரச் சினைகள் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால்..... இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும்போது தான், பரஸ்பரம் உங்கள் இரு
வரது உண்மையான முகம் ஒருவருக்கொருவர் தெரி யவரும்.

‘நான் விட்டுக்கொடுத்து விடுகிறேனே’ என்று நீங்கள் சொல்லலாம். எத்தனை நாளைக்கு விட்டுக் கொடுப்பீர்கள்?

அப்படியே விட்டுக் கொடுத்தாலும் அது முழு மன தாக இராது. என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு விடயத்தில் நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை என்றால் பிரச்சினை வெடிக்கும்.

அதுவரை ‘விட்டுக் கொடுப்பு’ என்ற பெயரில் நீங்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை யெல்லாம் ஒரே நாளில் கக்குவீர்கள்.

அப்போதுதான், அதுவரை காலமும் நீங்கள் முழுமனதோடு விட்டுக்கொடுப்பு களைச் செய்யவில்லை என்ற உண்மை உங்கள் கணவருக்கும் அவரது குடும்பத் தினருக்கும் தெரியவரும்.

அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை இப்போதே சொல்லிவிடவும் முடியாது.

பெற்றோர்களும் ஒன்றைத் தெரிந் துகொள்ள வேண்டும். ஒருவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவன், சாதி, சமயம், இனம், மொழி என்ற எல்லைகளைத் தாண்டியவனாகிறான்.

தங்கள் பிள்ளையின் துணையாக வருபவள்/ன் நல்லவளா/னாக இருக்கும் பட்சத்தில் அந்த வரையறைகளுக்குள் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.

முக்கியமாக, நம் நாட்டில் கிறிஸ்தவர்களும், இந்துக் களும் பரஸ்பரம் பிற சமயக் கடவுளர்களை வணங்கவே செய்கிறோம்.

அப்படியிருக்கையில் சமயத்தைக் காரணம் காட்டி உங்கள் பிள்ளைகளின் சந்தோஷத் துக்குத் தடைபோடுவது தவறு.

எல்லாச் சமயங்களும் ஒருவனை நல்லவனாக வாழவே வழிகாட்டுகின்றன. சாத்திரம், சம்பிரதாயம் வேறுபடலாம். ஆனால் சத்தியம் ஒன்றேதான் அல்லவா?

உங்களது காதல் உண்மையானதாக இருந்தால், வேதனைதான் என்றாலும் காத்திருப்பு ஒன்றே வெற்றி தரும்.