அந்தரங்கம் அறிவோம் : நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் எனது உறவுக்காரரும்தான். அதுபோலவே யாழ்ப் பாணத்திலும் ஒரு தவறு செய்ததாகச் சொன்னார்.

February 29, 2016

ஒரு முறை கொழும்பில் பாலியல் தொழிலாளி ஒருவருடன் உறவுகொண்டதாகச் சொன்னார்.

கேள்வி: நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் எனது உறவுக்காரரும்தான். வீட்டில் இந்த விடயம் தெரிந்து அதற்குச் சம்மதமும் தெரிவித்துவிட்டார்கள். அவர் என்ன செய்தாலும் என்னிடம் சொல்லிவிடுவார். ஒரு முறை கொழும்பில் பாலியல் தொழிலாளி ஒருவருடன் உறவுகொண்டதாகச் சொன்னார்.

அதுபோலவே யாழ்ப் பாணத்திலும் ஒரு தவறு செய்ததாகச் சொன்னார். அவர் செய்த தவறுகளை என்னிடம் சொல்வது எனக்குப் பிடித்திருந்தாலும் அவர் செய்த தவறுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்வது?

 பதில்: தவறு என்பது, தெரியாமல் நடக்கும் ஒரு விபத்துக்குச் சமமானது. அது ஒரு முறை மட்டும் நடந் தால்தான் அதைத் தவறு என்பார்கள். அடிக்கடி அது நடந்தால் அதற்குப் பெயர் பிழை.

தவறு செய்பவர்களை மன்னிப்பது சரிதான். ஆனால் பிழை என்று தெரிந்தும் அதைச் செய்பவர்களை எப்படி மன்னிக்க முடியும்?

அவர் செய்த தவறுகளை உங்களிடம் சொல்வதன் மூலம் அவர் தன்னுடைய நேர்மையை உங்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், தான் செய்வது பிழை என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

முதல்முறை அவர் தவறு செய்தபோதே, உங்களது கோபத்தையும், ஏமாற்றத்தையும் அவரிடம் காட்டியிருந்தால் மீண்டும் அவர் அதே பிழையைச் செய்திருக்க வாய்ப்பில்லை. 

இரண்டாவது முறை செய்த பிழையையும் அவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார் என்றால், இனி எந்தப் பிழை செய்தாலும் அதை உங்களிடம் சொல்லிவிட்டால் நீங்கள் அவரை மன்னித்துவிடுவீர்கள் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றியிருக்கிறது என்றுதானே பொருள்?

ஒருவேளை அவரை நீங்கள் திருமணம் செய்தபின்னும் கூட இதே நிலை தொடர்ந்தால் அப்போது உங்களால் அவரைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாமல் போய் விடும். 

எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

உங்கள் இருவரது வயதும் பொருத்தமாக இருப்பின் உடனடியாக அவரைத் திருமணம் செய்துகொள்வதே உங்கள் இருவருக்கும் நல்லது.