அந்தரங்கம் அறிவோம் : எனது மகளுக்கு வயது 10. கடந்த மாதம் அவர் பூப்பெய்தி விட்டார்.எமது உறவினர்கள் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். அவரது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துமா?

March 02,2016

குழந்தைப்பேறு உட்பட - அவர் எதிர் கொள்ள நேரும் என்றும் மித்திரன் மகளிர் மருத்துவம் பகுதியில் வாசித்திருக்கிறேன். அது உண்மைதானா?

கேள்வி: நாம் சுத்த சைவக்காரர்கள். எனது மகளுக்கு வயது 10. கடந்த மாதம் அவர் பூப்பெய்தி விட்டார். இது குறித்து எமது உறவினர்கள் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். நடைமுறைப் பிரச்சினைகள் பல இருப்பது ஒரு பக்கம்.

அவரது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளை - குழந்தைப்பேறு உட்பட - அவர் எதிர் கொள்ள நேரும் என்றும் மித்திரன் மகளிர் மருத்துவம் பகுதியில் வாசித்திருக்கிறேன். அது உண்மைதானா?

பதில்: உண்மைதான் என்றாலும், நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆனால், ஏனைய குழந்தைகளைக் காட்டிலும் உங்கள் மகளின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போதுள்ள பெண் குழந்தைகள் அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்சினை வருகிறது. இதில், சைவம், அசைவம் என்ற வேறுபாடுகள் இல்லை. நீங்கள் சைவக்காரர்களாக இருக்கலாம்.

ஆனால், அதிக கொழுப்புள்ள பாற்பொருட்கள் அல்லது பீஸா, பேர்கர் போன்ற பொருட்களைச் சாப்பிட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு பருவம் அடையும் சராசரி வயது 13ல் இருந்து குறைந்து 10 ஆகியுள்ளது.

இதன் காரணமாகவே இப்போது பெண்கள் பூப்பெய்வது அதி விரைவாக நடந்து விடுகிறது. இதுதான் உங்கள் மகள் விடயத்திலும் நடந்திருக்கவேண்டும்.

உங்கள் பயத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. பூப் பெய்தும் பருவம் முன்கூட்டியே வந்து விடுவதால், அனேக பெண் குழந்தைகள் தங்களுக்கு சீக்கிரமாகவே மாதவிடாய் வருவதாகக் கூறுகிறார்கள்.

இவ்வாறு சீக்கிரமே மாதவிடாய் வருவதால் அவர்களுக்கு மன அழுத்தமும், கவனக் குறைவும் ஏற்படுகின்றன. பருமனாக இருக்கும் பெண் குழந்தைகள் தினமும் உற்பயிற்சி செய்யவேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் பருமனான உடல் இருப்பவர்களுக்கு பூப்பெய்வது விரைவில் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், கருப்பை நோய், மலட்டுத்தன்மை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.

நகரத்தில் வாழும் இளம் பெண்கள் அதிக கொழுப்புள்ள உணவான பாற்பொருட்கள், பேர்கர் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வதே இல்லை.

இதனால் அவர்களின் ஹார்மோன் சமநிலை மாற்றமடைந்து சீக்கிரமே மாதவிடாய் ஏற்படுகிறது. 

இளம் வயதில் பருவம் அடைவதால் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். 10 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகள் அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றித் தெரியாதவர் களாக இருப்பார்கள்.

இதனால் அவர்கள் மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கையில் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக் கின்றது என்று நினைக்கத் துவங்குவார்கள்.

இந்த எண்ணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பமாட்டார்கள்.

வீட்டிற் குள்ளேயே அடைந்து கிடப் பதால் பருமன் அதிகமாகி மற்ற நோய்களுக்கு வழி வகுக்கும்.

ஒரு பெண் குழந்தை பருவம் அடையும்போது தாய் அவளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கத்தை கண் காணிக்க வேண்டும். அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

அவர்களுடன் அவர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் மாற்றம் குறித்து பேச வேண்டும்.