நான் என் பிள்ளைகள் பற்றி யோசிப்பதா இவரைப் பற்றி யோசிப்பதா?

03-03-2016

 கேள்வி: எனக்கு வயது 36. கணவருக்கு 34. 3 பெண் பிள்ளைகள். என் கணவர் திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறார். ஒருவாறாக அந்தத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். இப்போது வியாபார நிமித்தமாக ஒரு பெண்ணுடன் பழகவேண்டிய சூழல். அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.

அந்தப் பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் என் முன்னால் நின்று பேசுவதில்லை. என் அண் ணனிடம் கடன் வாங்கி ஒரு வான்வாங்கினார். அதில் அவரது முதலெழுத்தையும் அண்ணனது முதலெழுத்தையும்ஸ்டிக்கராக ஒட்டியிருக்கிறார்.

ஆனால், அந்தப் பெண்ணின் முதலெழுத்தும் என் அண்ணனின் முதலெ ழுத்தும் ஒன்று என்று அண்மையில் தெரியவந்தது. நான் என் பிள்ளைகள் பற்றி யோசிப்பதா இவரைப் பற்றி யோசிப்பதா? இதற்கு நல்லதொரு வழி சொல்லுங்கள்.

 பதில்: சந்தேகம் என்ற ஒன்று மனதுக்குள் புகுந்து விட்டால், அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வித மான விடயங்களை மட்டுமே முழுவதுமாக நம்பத் தோன்றும்.

இப்போது உங்கள் கணவர் மீது உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏற்கனவே ஒருமுறை அவர் வழி தவறியிருப்பது உங்களை இன்னும் இன்னும் உங்க ளுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்தவே உதவும்.

இந்த நிலையில் உங்கள் கணவர் மீது தவறு ஏதும் இருக்காது என்று யார் சொன்னாலும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். அது ஒரு புறம் இருக்கட்டும்.


உங்களது நீண்ட கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் உண்மையாக இருந்தால், சர்வ நிச்சயமாக உங்கள் கணவர் அந்தப் பெண் மீது மையல் கொண்டிருக்கிறார் என்றே கொள்ளலாம்.

ஆனால், சந்தேக மனம், எதையுமே தனக்குச் சார்பாகவே யோசிக்கும் என்பதால், நீங்கள் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையானவையா என்றும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.


இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு உபா யங்கள் இருக்கின்றன. ஒன்று, உங்களது கணவரைக் கண் காணிப்பது. இதற்காக அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருக்கவேண்டும்என்பதில்லை.

அவரது வேலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் எங்கே இருக்கிறார், எங்கே செல்கிறார், அவரது மாத வருமானம் என்ன, அதில் வீட்டுக்குக் கொடுக்கும் தொகையைத் தவிர மீதித் தொகை என்ன, அதைஅவர் எப்படிச் செலவிடுகிறார் என்பதையெல்லாம் அவர் வாயாலேயே கேட்டு அறிந்துகொள்வது.

இதன்மூலம், சில பல உண்மைகள் விரைவிலேயேதெரியவரும்.இரண்டாவது, அந்தப் பெண்ணிடம் நீங்கள் நட்பைஏற்படுத்திக்கொள்வது. பிள்ளைகள் பாடசாலை கிளம்பி யதும், கணவருடன் அந்த வானிலேயே ஏறிச் சென்று அந்தப் பெண்ணுடன் அளவளாவத் தொடங்குங்கள்.

இதன் மூலம் உங்கள் சந்தேகத்த உறுதிப்படுத்தலாம்.அது உறுதியானாலும் கூட அதை விலக்குவதற்கு இந்த நட் பைப் பயன்படுத்தலாம்  அல்லது அப்படி ஒரு தவறான உறவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.


ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் தெரிந்தே செய்யும் தவறுகளை எத்தனைதான் முயற்சி செய்தாலும் தடுக்க முடியாது. உங்களது பிரச்சி னையும் அந்த நிலையை எட்டியிருந்தால் குடும்பப் பெரி யவர்களின் உதவியை நாடுவதே சிறந்தது.