குதிகால் செருப்பு வாங்க போறீங்­களா?

April 07, 2016

குதிகால் செருப்­புகள் பெண்­க­ளுக்கு கம்­பீ­ர­மான தோற்­றத்தை மட்­டு­மின்றி தைரி­யத்­தையும் தன்­னம்­பிக்­கை­யையும் கொடுக்­கி­றது!

இதனால், குட்­டை­யான பெண்கள் தங்­க­ளுக்கு உய­ரமும் கம்­பீ­ர­மான தோற்­றமும் கிடைக்க உய­ர­மான குதிகால் செருப்­பு­களைத் தேடி அதி­க­விலை கொடுத்து வாங்கி அணி­கி­றார்கள். அப்­போது அச­வு­க­ரியம், ஆரோக்­கிய சீர்­கே­டு­க­ளையும் சந்­திக்­கி­றார்கள்.

* குதிகால் செருப்­ப­ணியும் 50 சத­வீத பெண்கள் காலில் சுளுக்­கு­டனும், குதிகால் வலி­யு­டனும் அவ­திப்­ப­டு­வ­துண்டு.

* குதி­காலின் பின்­பக்கம் சில­ருக்கு சிவந்து வீங்­கி­யி­ருக்கும். அவர்­க­ளது காயம் வெளியே தெரி­யாமல் குதி­காலின் உள்­ளெ­லும்பில் கீறலோ அல்­லது முறிவோ ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்­விண்­ணெனத் தெறிக்­கிற மாதிரி 'நியு­ரோமா' எனப்­படும் கடு­மை­யான வலி ஏற்­ப­டலாம்.

* குதிகால் செருப்­பு­களை நீண்­ட­நேரம் அணி­யும்­போது குதிகால் தசை­நார்கள் சுருங்கிப் போகும். அதிக உய­ர­மான குதிகால் செருப்­பு­களை நீண்­ட­நேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்­பட்டு அதிக அழுத்தம் ஏற்படு­வ­துடன், முழங்கால் மூட்­டு­வ­லியும் ஏற்­படும்.

இந்த பாதிப்பு ஏற்­ப­டாமல் இருக்க டாக்­டர்கள் சொல்லும் ஆலோ­சனை:-
குதிகால் செருப்­பு­களை வாங்­கும்­போது கவ­னிக்க வேண்­டி­யவை:

* உங்கள் கால் அளவை சரி­யாகத் தெரிந்­து­கொண்டு அதற்குப் பொருத்­த­மான அதிக உய­ர­மில்­லாத குதிகால் செருப்­பு­களைத் தேர்ந்­தெ­டுங்கள். பிர­ப­ல­மான கம்­பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அள­விற்குப் பொருந்­தாத குதிகால் செருப்­பு­களை ஒரு­போதும் வாங்­கா­தீர்கள்.

* பகல் முழு­வதும் நீங்கள் நடந்து வேலை­மு­டித்து மாலையில் வீடு திரும்­பும்­போது உங்கள் கால் சற்று வீக்­கத்­துடன் காணப்­படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்­த­மா­னது.

* நீங்கள் அதிக உய­ர­மாக தெரிய வேண்டும் என்று அள­வுக்கு மீறிய 6 அங்­குல உய­ர­முள்ள குதிகால் செருப்­பு­களை வாங்­கா­தீர்கள். மிக உய­ர­மான குதிகால் செருப்­பு­களே அதிக பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும்.

* 2 அங்­குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்­பு­களே ஆபத்­தில்­லா­தவை, பாது­காப்­பா­னவை.

* குதிகால் செருப்பின் அடிப்­பாகம், மேற்­ப­குதி மற்றும் ஓரங்­களின் லைனிங் செயற்­கை­யான வினைல் போன்ற சிந்­தடிக் பைபரில் செய்­யப்­ப­டாமல் இயற்­­கை­யான தோலினால் செய்­யப்­பட்­டுள்­ளதா என்­பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்­பு­களே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்­டவை. அவைதான் காலிற்கு காற்­றோட்­ட­மாக அமைந்து பாது­காப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்­ப­குதி மேற்­புறம் முழு­வதும் மூடி­யி­ராமல் அங்­கங்கே காற்று புகும்­படி திறந்த வெளி­யாக இருக்க வேண்டும்.

* அதி­க­நேரம் குதிகால் செருப்­ப­ணி­யாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கிய­மானது.