ஒரே வாரத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமை மாற வேண்டுமா?

May 06, 2016

 

ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்கு வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகம் தான் காரணம்.

ஆனால் அதை யாரும் வெளியே சொல்லிக் கொள்ளமாட்டார்கள். மாறாக அதற்கான முயற்சிகளை தினமும் மேற்கொள்வார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, அழகு நிலையங்களுக்குச் சென்று பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள்.

ஆனால் இப்படி பணம் செலவழித்து சரும நிறத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள இயற்கையான மற்றும் மலிவான பொருட்களைக் கொண்டே சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம்.

அதற்கு அந்த பொருட்கள் என்னவென்றும், எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அதனால் ஒரு நன்மை மட்டுமின்றி, பல நன்மைகள் கிடைக்கும். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை ஒரே வாரத்தில் அதிகரிக்க உதவும் அப்பொருட்கள் என்னவென்றும், எப்படி பயன்படுத்துவதென்றும் பார்ப்போம்.

மஞ்சள்
பல வருடங்களாக நம் முன்னோர்கள் அழகை அதிகரிக்கப் பயன்படுத்தி வந்த பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சள் பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அதிலும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்து, ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்தால் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதற்கு பாதி உருளைக்கிழங்கை வெட்டி அரைத்து , அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எலுமிச்சை
வறட்சியான மற்றும் சென்சிடிவ் சருமத்தினர் எலுமிச்சை சாற்றினை நேரடியாக முகத்தில் தடவாமல், தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அதுவே எண்ணெய் பசை சருமத்தினர் என்றால் நேரடியாக எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தலாம்.

தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு 2 ஸ்பூன் தயிரில், 1 ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்தம், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

சந்தனம்
சந்தனப் பொடியை நீரில் கலந்து அல்லது சந்தனக் கட்டையை தேய்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.

இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் மேற்கொண்டு வந்தால், சருமத்தின் நிறம் வேகமாக அதிகரிக்கும்.

பாதாம் பால்
இரவில் படுக்கும் முன், பாதாமை அரைத்து பால் எடுத்து அந்த பாலை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், பாதாமில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்குக் கிடைத்து, சருமத்தின் நிறமும் மேம்படும்.

அவகேடோ
அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை தனியாக எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம்
1 வாழைப்பத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.