உங்களின் முகத்தை பொழிவூட்டும் கடலை மா...!

May 20, 2016


​இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும்.

நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

அதேபோல் குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்பூசவும்.

பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும், இளமையோடு காட்சி தரும்.

கடலை மாவு 1 டீஸ்பூன், ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள்.

பிறகு இதை முகத்தில் ‘பேக்ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்தநீரில் கழுவ வேண்டும். பருக்கள்இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங் கொழுந்து 5 கிராம்இவற்றை நிழலில் உலர்த்தி.

நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.