சிறுவயது தொட்டே பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்

March 22, 2016


''தொட்டில் பழக்கம் சுடு­காடு வரை'' என்­பது முது­மொழி. ஆம்! சிறு­வர்­க­ளுக்கு அவர்கள் படிப்­ப­டி­யாக வளர்ச்­சி­ய­டையும் போதே நற்­ப­ழக்க வழக்­கங்­க­ளையும் ஒழுக்கத்­து­ட­னான சீரிய வாழ்வை வாழ்­வது எப்­படி என்­ப­தையும் கற்­றுக்­கொ­டுக்க வேண்டும்.

அப்­போது தான் அவர்­களின் எதிர்­காலம் சிறப்­பா­ன­தாக அமையும். நூல்­களின் மூலம் கற்­றுக்­கொ­டுப்­ப­துடன், அன்­பாலும் கற்­றுக்­கொ­டுங்கள்.

சிறு­வ­யதில் பிள்­ளை­க­ளிடம் எது விதைக்­கப்­ப­டு­கின்­றதோ, அது தான் வளர்ந்த பின்னும் அவர்­களை தொடரும். சிறு­வர்­க­ளுக்கு நற்­க­ருத்­துகள்  பசு­ம­ரத்­தா­ணியை போல் அவர்கள் மனதில் பதிப்­பிக்­கப்­பட வேண்டும் .

இவை பெற்­றோர்­களின் கரங்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

இன்­றைய சிறு­வர்கள் தான் நாளைய தலை­வர்கள் என்­பதால் அவர்­களை நற்­சிந்­தனை கொண்­ட­வர்­க­ளா­கவும் நற்­ப­ழக்­க­வ­ழக்­கங்­களை கொண்­ட­வர்­க­ளா­கவும் சமூ­கத்தில் நிலை­நி­றுத்த வேண்டும்.காரணம் நாளைய நாட்டின் எதிர்­கால தூண்கள் சிறு­வர்கள்.

இன்­றைய கால­கட்­டத்தில்  வாழ்க்கை தேவை­களும் பொரு­ளா­தார தேவை­களும் பன்­ம­டங்கு உயர்ந்­துள்­ளதன் விளை­வாக, கணவன் , மனைவி என இரு­பா­லாரும் இணைந்து  பணி செய்ய வேண்­டிய நிலை­யேற்­பட்­டுள்­ளது.

இருப்­பினும் பிள்­ளை­க­ளுக்கும் அதீத முக்­கி­யத்­துவம் கொடுங்கள். காரணம், அவர்கள் பெற்­றோ­ரது அன்­பையும் அர­வ­ணைப்­பையும் அதிகம் எதிர்­பார்ப்­பார்கள். அது முறை­யான விதத்தில் கிடைக்­காத பட்­சத்­தி­லேயே தீய­வ­ழி­களை நோக்கி செல்ல தலைப்­ப­டு­கின்­றனர்.

பெற்றோர் என்­னதான் வேலைப்­பளு கார­ண­மாக இயந்­தி­ர­ம­ய­மாக செயற்­பட்­டாலும் வீட்­டுக்கு வந்த பிற­கேனும் பிள்­ளை­க­ளுடன் இயல்­பாக பேச வேண்டும்.

அன்­றைய அனு­ப­வங்­களைக் கூட பிள்­ளை­க­ளுடன் பகிர்ந்து கொள்­வது மேலும் பெற்­றோ­ரு­ட­னான பிணைப்பை அதி­க­ரிக்கும்.

அத்­துடன்  நல்ல நூல்­களை சிறு­வர்­க­ளுக்கு  பெற்­றுக்­கொ­டுப்­ப­தோடு, அவற்றை வாசிக்­கத்­தூண்டும் வகை­யிலும் பெற்றோர்  செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். எந்­தக்­கு­ழந்­தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்­கை­யிலே.

அது நல்­ல­வ­னா­வதும் தீய­வ­னா­வதும் அன்னை வளர்ப்­பி­னிலே என்­பார்கள். பெற்­றோ­ருக்கு அடுத்த படி­யா­கத்தான் ஆசான் எனும் தாயிடம் பிள்ளை ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை நினைவில் கொள்­ளுங்கள்.

இந்­தச்­சமூகம்  பல சவால்­களை கொண்­டது. அதற்கு ஈடு­கொ­டுத்து வாழ்­வ­தென்­பது மிகப்­பெ­ரிய விடயம். ஆகையால் நேர்மை  எனும் பண்பு ஒவ்­வொரு பிள்­ளையின் மன­திலும் பதி­யப்­ப­டு­மானால்  நிச்­சயம் அவர்­களின் எதிர்­கால வாழ்வை அது சிறப்­பாக்கும்.

பக­வத்­கீதை, அல்­குர்ஆன், புனித பைபிள்,மகாவம்சம் என்பவற்றில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் கற்றுக்கொடுங்கள்.

இலட்சியத்துக்கான முனைப்பையும் அதனை அடையும் நோக்கின் வழிகாட்டுதலையும் சிறுவர்களில் ஏற்படுத்துங்கள். இதுவே ஒவ்வொரு பெற்றோரினது கடமையும் கடப்பாடுமாகும்.