உங்கள் குழந்தை உடல் மெலிந்து உள்ளதா? கவலையை விடுங்கள்.

10-05-2016

 

மெலிந்த குழந்­தையின் உடல் எடையை அதி­க­ரிக்க ஒரு குறிப்­பிட்ட உண­வுகள் உதவி புரியும்.புரோட்டீன் நிறைந்த உண­வு­களை குழந்­தை­க­ளுக்கு கொடுக்­கையில் தசைகள் வளர்ச்சிப் பெற்று, உடல் எடை அதி­க­ரிக்கும்.

எனவே உங்கள் குழந்­தையின் உடல் எடையை அதி­க­ரிக்க நினைத்தால், கீழே கொடுக்­கப்­பட்­டுள்ள உணவுப் பொருட்­களை உங்கள் குழந்­தை­க­ளுக்கு கொடுத்து வாருங்கள்.


வெண்­ணெயில் நல்ல கொழுப்­புக்கள் உள்­ளது. எனவே ஒல்­லிக்­குச்சி போன்று உள்ள உங்கள் குழந்­தைக்கு வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்­களை தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் தானாக உடல் எடை அதி­க­ரிக்கும்.


பால் பொருட்­க­ளான பால் மற்றும் க்ரீம்­களில் கலோ­ரிகள் ஏரா­ள­மான அளவில் நிறைந்­துள்­ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்­தைக்கு தவ­றாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். மேலும் செரில் ஏதேனும் சாப்­பி­டு­வ­தற்கு கொடுப்­ப­தாக இருந்தால், அத்­துடன் க்ரீம் சேர்த்துக் கொடுங்கள்.


முட்­டையில் புரோட்டீன் வள­மாக உள்­ளது. இதனை தினமும் வளரும் குழந்­தை­க­ளுக்கு கொடுத்து வந்தால், அவர்­களின் வளர்ச்சி அதி­க­ரிப்­ப­தோடு, உடல் எடையும் அதி­க­ரிக்கும். மேலும் முட்­டையில் விட்­டமின் ஏ, விட்­டமின் பி12 போன்­றவை அதிகம் உள்­ளது.


வாழைப்­ப­ழத்தில் உடலின் ஆற்­றலை உட­ன­டி­யாக அதி­க­ரிக்கும் உட்­பொ­ருட்கள் மற்றும் கலோ­ரிகள் உள்­ளது. மேலும் இதில் அத்­தி­யா­வ­சிய கார்­போ­ஹைட்­ரேட்­டு­களும் நிறைந்­துள்­ளதால், இது உடலில் நல்ல கொழுப்­புக்­களின் அளவை அதி­க­ரித்து, உடல் எடை அதி­க­ரிக்க வழி­வ­குக்கும்.


கோழி இறைச்சியில் புரோட்டீன் அதிக அளவில் உள்­ளது. மேலும் இது தசை­களின் வளர்ச்­சிக்கும் உதவும். ஆகவே உய­ரத்­திற்கு ஏற்ற உடல் எடை இல்­லாத குழந்­தை­க­ளுக்கு, கோழி இறைச்சியை அடிக்­கடி கொடுத்து வாருங்கள். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.


வெண்ணெய் பழம் உடல் எடை குறை­வாக உள்­ள­வர்­க­ளுக்கு ஏற்ற ஓர் பழம். இதில் நல்ல கொழுப்­புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.