ஆங்கிலம் கற்போம்.

September 13, 2015
பகுதி (இ)

பாடம் (53)

கலப்பு வாக்கியம் - Complex Sentence
until, tillமற்றும் since முதலான இணைக்கும் சொற்களை (Joining words) தனித் தனியாகக் கையாண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ள கலப்பு வாக்கியங்களை இங்கே அவதானிப்போம்.

 

(அ) I have to wait here, until the next bus comes.

அடுத்த பேரூந்து வரும் வரைக்கும், நான் இங்கே காத்திருக்க வேண்டியுள்ளது.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

* I have to wait here,

நான் இங்கே காத்திருக்க வேண்டியுள்ளது.

(பிரதம வாக்கியப் பகுதி - Chief Clause)

* Until the next bus comes.

அடுத்த பேரூந்து வரும் வரைக்கும்.

(துணை வாக்கியப் பகுதி - Subordinate Clause)

 

(ஆ) I can't wait here, until you finish your work.

நீ உனது வேலையை முடிக்கும் வரைக்கும், என்னால் இங்கே காத்திருக்க இயலாது.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

* I can't wait here,

என்னால் இங்கே காத்திருக்க இயலாது

(பிரதம வாக்கியப்பகுதி - Chief Clause)

* Until you finish your work.

நீ உனது வேலையை முடிக்கும் வரைக்கும்.

(துணை வாக்கியப் பகுதி - Subordinate Clause)

 

(இ) Please do not go out, till I tell you.

நான் உனக்கு சொல்லுகின்ற வரைக்கும், தயவு செய்து வெளியே போக வேண்டாம்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

* Please do not go out,

தயவு செய்து வெளியே போக வேண்டாம்,

(பிரதம வாக்கியப் பகுதி - Chief Clause)

* Till I tell you.

நான் உனக்கு சொல்லுகின்ற வரைக்கும்.

(துணைவாக்கியப் பகுதி - Subordinate Clause)

 

(ஈ) We should wait at home, until they come.

அவர்கள் வரும் வரைக்கும், நாங்கள் வீட்டில் தான் காத்திருக்க வேண்டும்

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

* We should wait at home,

நாங்கள் வீட்டில் தான் காத்திருக்க வேண்டும்,

(பிரதம வாக்கியப் பகுதி - Chief Clause)

* Until they come.

அவர்கள் வரும் வரைக்கும்.

(துணை வாக்கியப் பகுதி - Subordinate Clause)

 

(உ) Since he returned from China, he has not been well.

அவன் சீனாவில் இருந்து திரும்பி வந்தது முதல், ஆரோக்கியம் அற்றவனாக இருந்து வருகின்றான்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

* Since he returned from China,

அவன் சீனாவில் இருந்து திரும்பி வந்தது முதல்,

(துணை வாக்கியப் பகுதி - Subordinate Clause)

* He has not been well.

அவன் ஆரோக்கியம் அற்றவனாக இருந்து வருகின்றான்.

(பிரதம வாக்கியப் பகுதி - Chief Clause)

 


எஸ். ஆர். ஜோதி
மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமாயின்
தொடர்புகளுக்கு - 0776525361