ஆங்கிலம் கற்போம்.

September 21, 2015

பகுதி (இ)

பாடம் - 55

கலப்பு வாக்கியம் - Complex Sentence

Wherever, Whatever, Even if முதலான இணைக்கும் சொற்களை (Joining Words) தனித் தனியாகக் கையாண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ள கலப்பு வாக்கியங்களை இங்கே அவதானிப்போம்.

 

(அ) You may sit wherever you like.

நீ விரும்புகின்ற எவ்விடத்திலாவது உட்காரலாம்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

You may sit.

நீ உட்காரலாம்

(பிரதம வாக்கிய பகுதி- Chief Clause )

 

Wherever you like

நீ விரும்புகின்ற எவ்விடத்திலாவது,

(துணை வாக்கிய பகுதி - Subordinate Clause)

 

(ஆ) Whatever the price may be, I will buy that dictionary.

விலை என்னவாக இருந்தாலும் நான் அந்த அகராதியை வாங்குவேன்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

Whatever the price may be,

விலை என்னவாக இருந்தாலும்

(துணை வாக்கியபகுதி -  Subordinate Clause)

 

I will buy that dictionary

நான் அந்த அகராதியை வாங்குவேன்.

(பிரதம வாக்கியப் பகுதி - Chief Clause)   

 

(இ) Whatever happens you should not get angry.

என்ன நிகழ்ந்தாலும் நீ கோபம் அடையக் கூடாது.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

Whatever happens,

என்ன நிகழ்ந்தாலும்

(துணை வாக்கிய பகுதி -  Subordinate Clause)

 

You should not get angry

நீ கோபம் அடையக்கூடாது

(பிரதம வாக்கிய பகுதி - Chief Clause)

 

(ஈ) Whatever he says, You should not tell anything

அவன் என்ன கூறினாலும் நீ எதனையும் சொல்லக் கூடாது.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

Whatever he says,

அவன் என்ன கூறினாலும்

(துணை வாக்கிய பகுதி -  Subordinate Clause)

 

You should not tell anything

நீ எதனையும் சொல்லக்கூடாது

(பிரதம வாக்கிய பகுதி - Chief Clause )

 

(உ) Even if it rains, I must go to office.

மழை பெய்தாலும் கூட நான் அலுவலகத்துக்கு கட்டாயம் போக வேண்டும்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

Even if it rains,

மழை பெய்தாலும் கூட

(துணை வாக்கிய பகுதி - Subordinate Clause)

 

I must go to office

நான் அலுவலகத்துக்கு கட்டாயம் போக வேண்டும்

(பிரதம வாக்கிய பகுதி - Chief Clause)

 

(ஊ) Even if you pay him, he won't to that work.

நீ அவனுக்குப் பணம் செலுத்தினாலும் கூட அவன் அந்த வேலையை செய்ய மாட்டான்.

(கலப்பு வாக்கியம் - Complex Sentence)

 

Even if you pay him,

நீ அவனுக்குப் பணம் செலுத்தினாலும் கூட

(துணை வாக்கிய பகுதி - Subordinate Clause)

 

He won't do that work.

அவன் அந்த வேலையை செய்யமாட்டான்.

(பிரதம வாக்கிய பகுதி - Chief Clause)

 

மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமாயின்

தொடர்புகளுக்கு - 077 6525361

மீண்டும் சந்திப்போம்