ஆங்கிலம் கற்போம்.

October 22, 2015
பகுதி (இ)
பாடம் - 57

Did எனும் துணை வினைச் சொல்
The Auxiliary verb Did

இறந்த கால தனி வாக்கியங்களில் (past simple tense) காணப்படுகின்ற உடன்பாடு வாக்கியங்களை வினா வாக்கியங்களாக மாற்றியமைப்பதற்கு Did எனும் துணை வினைச் சொல் உதவி புரிகிறது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் Did என்பது உதவி புரியும் வினைச்சொல் (Helping verb) எனப்பெயர் பெறுகின்றது.

தகுந்த உதாரணங்கள் மூலம் அவற்றை இங்கே அவதானிப்போம்.

(அ) You gave your book to sarath

        நீ உனது புத்தகத்தை சரத்திடம் கொடுத்தாய்.

        (உடன்பாடு வாக்கியம் - Affirmative)

 ・ மேற்படி உடன்பாடு வாக்கியத்தை பின்வருமாறு வினா வாக்கியமாக மாற்றியமைக்கலாம்.

(ஆ) Did you give your book to sarath?

        நீ உனது புத்தகத்தை சரத்திடம் கொடுத்தாயா?

        (வினா வாக்கியம் - Interrogative)

・ விளக்கம் (1) - மேலே உள்ள உடன்பாடு வாக்கியத்தில் காணப்படுகின்ற வினைச் சொல்லான ''Gave'' என்பது இறந்தகால வினைச்சொல் ஆகும். இந்த வினைச் சொல் வினா வாக்கியத்தில் ''Did'' சகிதம் கையாளப்படுகின்ற போது ''Give'' என நிகழ்கால வினைச்சொல்லாக மாற்றம் அடைவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ・ விளக்கம் (2) - இங்கே வினா வாக்கியத்தில் ''Did'' என்பதற்கு தனியான அர்த்தம் பெறப்படுவதில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் ''Did'' என்பது உதவி புரியும் வினைச் சொல்லாக (Helping verb)  மாத்திரமே செயல்படுகின்றது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பு (1) -

Gave - இறந்தகால வினைச்சொல்

Give - நிகழ்கால வினைச்சொல்

 ・ You Gave (Affirmative Sentence)

        நீ கொடுத்தாய் (உடன்பாடு வாக்கியம்)

 ・ Did you give? (Interrogative sentence)

        நீ கொடுத்தாயா? (வினா வாக்கியம்)

(இ) You took my pen

         நீ எனது பேனாவை எடுத்தாய்.

        (உடன்பாடு வாக்கியம் - Affirmative)

 

(ஈ) Did you take my pen?

       நீ எனது பேனாவை எடுத்தாயா?

       (வினா வாக்கியம் - Interrogative)

 ・ You took (Affirmative Sentence)

       நீ எடுத்தாய் (உடன்பாடு வாக்கியம்)

 ・ Did you take? (Interrogative sentence)

       நீ எடுத்தாயா? (வினா வாக்கியம்)

(உ) You ate your dinner

        நீ உனது இரவுணவை சாப்பிட்டாய்

        (உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence)

(ஊ) Did you eat your dinner?

        நீ உனது இரவுணவை சாப்பிட்டாயா?

        (வினா வாக்கியம் - Interrogative sentence)

 ・ You ate (Affirmative Sentence)

       நீ சாப்பிட்டாய் (உடன்பாடு வாக்கியம்)

 ・ Did you eat? (Interrogative sentence)

       நீ சாப்பிட்டாயா? (வினா வாக்கியம்)

குறிப்பு -

Ate - என்பது இறந்தகால வினைச்சொல்

Eat -  என்பது நிகழ்கால வினைச்சொல்

 மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமெனில்
தொடர்புகளுக்கு - 077-6525361
மீண்டும் சந்திப்போம்