ஆங்கிலம் கற்போம்

October 26, 2015
பகுதி (இ)
பாடம் 59

Did எனும் துணை வினைச்சொல் (Auxiliary Verb ) இறந்த கால தனி வாக்கியங்களில் காணப்படுகின்ற வினா வாக்கியங்களில் மூல வினைச்சொல் ( Stem Verb ) சகிதம் கையாளப்படுகின்ற போது உதவி புரியும் வினைச்சொல்லாக (Helping Verb) செயல்படுகின்றது என்பதை ஞாபகத்தில் கொண்டு மேலும் உதாரணங்களை இங்கே அவதானிப்போம்.

 

(அ) You saw  the new album?

நீ புதிய அல்பத்தைப் பார்த்தாயா?

( உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence )

 

(ஆ) Did you see the new album?

நீ புதிய அல்பத்தைப் பார்த்தாயா?

( வினா வாக்கியம் - Interrogative Sentence )


* You saw ( Affirmative Sentence )

நீ பார்த்தாய்

 ( உடன்பாடு வாக்கியம் )

 

* Did you see ( Interrogative Sentence )

நீ பார்த்தாயா? ( வினா வாக்கியம்)

 

(இ) He bought a new pen

அவன் புதிய பேனா ஒன்று வாங்கினான்

(உடன்பாடு வாக்கியம் -  Affirmative Sentence )

 

(ஈ) Did he buy a new pen?

அவன் புதிய பேனா ஒன்று வாங்கினானா ?

( வினா வாக்கியம் Interrogative Sentence )

 

* He bought (affirmative Sentence )

அவன் வாங்கினான் ( உடன்பாடு வாக்கியம்)

 

* Did he buy? ( Interrogative Sentence )

அவன் வாங்கினானா? ( வினா வாக்கியம்)

 

(உ) She brought the money

அவள் பணத்தைக் கொண்டு வந்தாள்

(உடன்பாட்டு வாக்கியம் - Affirmative Sentence )

 

(ஊ) Did she bring the money?

அவள் பணத்தைக் கொண்டு வந்தாளா?

(வினா வாக்கியம் - Interrogative Sentence )

 

* She brought ( Affirmative Sentence )

அவள் கொண்டு வந்தாள் (உடன்பாடு)

 

* Did she bring? ( Interrogative Sentence )

அவள் கொண்டு வந்தாளா ? (வினா)

 

(எ) It jumped into  the well

அது கிணற்றுக்குள் பாய்ந்தது

( உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence )

 

(ஏ) Did it jump into the well?

அது கிணற்றுக்குள் பாய்ந்ததா?

(வினா வாக்கியம் - Interrogative Sentence )

 

* It jumped ( Affirmative Sentence )

அது பாய்ந்தது (உடன்பாடு வாக்கியம்)

 

* Did it jump? ( Interrogative Sentence )

அது பாய்ந்ததா ?  ( வினா வாக்கியம்)

 

(ஐ) The cat ran into the garden

பூனை தோட்டத்துக்குள் ஓடியது

( உடன்பாடு வாக்கியம் - Affirmative Sentence )

 

(ஒ) Did the cat run into the garden?

பூனை தோட்டத்துக்குள் ஓடியதா?

( வினா வாக்கியம் - Interrogative Sentence )

 

* The cat ran ( Affirmative Sentence )

பூனை ஓடியது ( உடன்பாடு வாக்கியம் )

 

* Did the cat run? ( Interrogative Sentence )

பூனை ஓடியதா? ( வினா வாக்கியம்)

 


மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமெனில்
தொடர்புகளுக்கு 077 - 6525361
மீண்டும் சந்திப்போம்