வாக்களிக்கும் முன் அப்படி என்னதான் யோசித்திருப்பார் விஜய்?

May 17,2016

சென்னை: பொதுவாக வாக்களிக்கும் எந்திரத்துக்கு முன் வந்துவிட்டால், சட்டுபுட்டென்று வாக்கைச் செலுத்திவிட்டு நடையைக் கட்டுவது பிரபலங்களின் வாடிக்கை.

 நடிகர் விஜய்யும் அதற்கு விலக்கல்ல.

ஆனால் இந்த முறை வாக்களிக்கும் இயந்திரத்துக்கு முன் வந்ததும் அவர் உடனே வாக்களித்துவிடவில்லை. காலை 10.45 மணிக்கு வாக்குச் சாவடிக்கு வந்த அவர்,

விரலில் மை வைத்துக் கொண்டு வாக்களிக்கும் இயந்திரம் முன் போனதும், யாரையும் திரும்பிப் பார்க்காமல், சற்று நேரம் யோசித்துக் கொண்டே நின்றார்.

சில நிமிட யோசனைக்குப் பிறகு அவர் தனது வாக்கைச் செலுத்தினார். அப்படி என்ன யோசித்திருப்பார் விஜய்? என்று அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.

கடந்த தேர்தலின்போது அதிமுகவுக்கு பகிரங்க ஆதரவு தந்தவர் விஜய்.

அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பிரச்சாரமே செய்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆளும் கட்சியுடன் அவருக்கு சுமூக உறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.