விஜய்யின் ஹீரோயினுடன் ஜோடியான அஜித்....!

May 30, 2016


அஜித் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.

ஆனால், தற்போதைக்கு இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பது மட்டும் தெரிகின்றது, இதில் அனுஷ்கா தான் பெரும்பாலும் ஒரு ஹீரோயினாக கமிட் ஆவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்துடன் விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன் என கூறியுள்ளார். இதனால், தல-57ல் காஜல் நடிப்பது தெரிய வந்துள்ளது.

எது எப்படியோ! படக்குழு அதிகாரப்பூர்வமாக சொன்னால் தான் அவை உண்மையாகும்.

காஜல் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லாபடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.