சூர்யாவால் தாக்கப்பட்ட இளைஞன் தற்கொலை முயற்சி...!

May 31, 2016


சென்னை அடையாரில் சூர்யா இரண்டு வாலிபர்களை தாக்கிய பிரச்சனை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண்ணை இருவரும் வம்பு செய்ததாகவும், அதை பார்த்த சூர்யா அடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது.

அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று புகார் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து சூர்யா, யாரையும் தான் அடிக்கவில்லை என்றும், அந்த பெண்ணை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற மட்டுமே தலையிட்டதாக கூறியிருக்கிறார்.