ரஜினிகாந் நலமாக தான் இருக்கிறார் : வதந்திகளை நம்ப வேண்டாம்...!

June 09, 2016


ரஜினிகாந் நடிப்பில் விரைவில் கபாலி படம் வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஜுன் 12ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது, இதுமட்டுமின்றி நேற்று யாரோ ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் அமெரிக்கா சென்றுள்ளார் என கூறிவிட்டனர்.

இச்செய்தி பலரும் அதிர்ச்சியை ஏற்பட்டு காட்டுதீ போல் பரவியது, ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் நலமாக தான் இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.