இணையதளம் ஒன்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய அதிர்ச்சி செய்தி : சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆனது?

June 16, 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையில் காண பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் ஒரு சில மாதங்களாக சென்னையில் இல்லை.

இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு சிலர் இவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் இங்கு இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறினார்கள்.

இன்று ஒரு தளத்தில் ரஜினிகாந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர், உடனே சமூக வலைத்தளத்தில் செய்திகள் வேகமாக பரவத்தொடங்கியது.

பிறகு நாம் ரஜினி தரப்பை தொடர்பு கொண்டு கேட்ட வரை, அவர் நலமாக தான் உள்ளார், எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.