பெங்களூரில் பதற்றநிலையை ஏற்படுத்திய ஆபாச நடிகை சன்னி லியோன்

December 18, 2017

கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து பெங்களூருவில் நடக்க இருந்த சன்னி லியோனின் நடனத்துக்கு கர்நாடக அரசு அனுமதி தர மறுத்துள்ளது.  பெங்களூரு வொயிட் ஆர்க்கிட் கன்வென்சன் மையத்தில் புத்தாண்டை முன்னிட்டு, பொலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆபாச நடிகையான சன்னி லியோன், கலந்து கொண்டால் கலாச்சாரம் பாதிக்கும் என்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.  நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு மிரட்டலும் விடுத்தனர்.

  இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.  சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரு காவற்துறைக்கு உத்தரவிட்டார். 

கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் பெங்களூருவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.  இதையடுத்து கர்நாடக அரசு அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை.  நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறும்போது, ’சன்னி லியோன் வருவதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தெரியவில்லை.

  இது குடும்ப விழாதான். அதை தவிர ஆபாசமான நடனம் ஏதும் நடக்கப் போவதில்லை.  காவற்துறையிடம் இருந்து எந்த விதமான தடை உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்றார்.

  இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்போவதில்லை என்று மூத்த காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பெங்களூரு செய்திகள் தெரிவிக்கின்றன.