புதியதொரு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்!

January 20,01,2018

இது நம்ம ஸ்ருதிஹாசன் தானா! என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு புதியதொரு தோற்றத்தில் வந்துள்ளார்!

பிரபல பத்திரிக்கை (Femina) ஒன்றின் அட்டைப் படத்தில் அவரது புகைப்படம் இடம்பெறுகிறது. இதற்கான புகைப்பட படப்படிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்பத்திரிக்கை தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் புகைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது, நடந்த நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் நம் ஸ்ருதிஹாசன் புதிய தோற்றத்தில் அனைவரையும் கவர்கின்றார்!