பலரும் வியந்து பேசிய திருமண நிகழ்வு

January 23,01,2018

 

பலரும் வியக்கும் வகையில் திருமண நிகழ்வு ஒன்று நம்நாட்டில் இடம்பெற்றுள்ளது.பெருந்தொகை பணத்தை செலவிட்டு, ஆடம்பர உணவகங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழமை.எனினும் லசித மற்றும் திலினி முனசிங்க என்ற தம்பதிகளுக்கு நடந்த திருமணம் அனைவரும் பேசும் அளவுக்கு பிரபல்யம் அடைந்துள்ளது.இந்த திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மணமகன் மற்றும் மணமகளால் பரிசே அதற்கு காரணம்.

 

குறித்த பரிசு பொதியில், சீத்தா மரக்கன்று ஒன்றை தம்பதியினர் திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.சீத்தா மரக்கன்றினை கட்டாயமாக நாட்டுமாறு தம்பதியினர் அன்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இளம் தம்பதியினர் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் வர்த்தக நோக்கம் காரணமாக காடுகளை அழித்து வரும் நிலையில், இந்த தம்பதியினரின் செயற்பாடு பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது.உலகளாவிய ரீதியில் காடுகளை அழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 4வது இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.