கமலும் மய்யமும்

February 22,02,2018

 

மதுரை – ஒத்தக்கடையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கொடியை ஏற்றி, கட்சியின் பெயரையும் முதன்முறையாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

“மக்கள் நீதி மையம்” என்ற பெயரில் தனது கட்சியை நடிகர் கமல் ஹாசன் அங்குரார்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைந்த கரங்களுடன் கூடிய வெண்ணிறக் கொடியைக் கட்சிக்கொடியாக நடிகர் கமல் ஹாசன் வௌிப்படுத்தியுள்ள்ளார்.

“மக்கள் நீதி மையம்” என்ற பெயரில் மையம் என்பதை ‘மய்யம்’ என்று கமல் தவறாக் குறிப்பிட்டுவிட்டார் என்று பலர் சமூகவலைத்தளங்களில் குறிப்பிடுகின்றனர். 

மையம் மற்றும் மய்யம் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. மய்யம் = புதிய உயிர் / ஆயுதம். 

25 வருடங்களின் முன் வந்த கமலின் மய்யம் என்ற சஞ்சிகையின் பெயரின் அடிப்படையிலேயே இந்தக் கட்சிப்பெயரும் உருவாகியுள்ளது.

இதே பெயரிலேயே அவரின் YouTube channel உம் நீண்ட நாட்களாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை கமலின் தமிழ் ஆளுமை தென்படுகிறது.