கோதுமை அல்வா : செய்முறைகளுடன்...!

May 22, 2016


தேவையான பொருட்கள்

  • சம்பா கோதுமை - ஒரு கப்
  • சீனி - 3/4 கப்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நெய் - அரை கப்
  • முந்திரிப்பருப்பு - 50 கிராம்
  • ஏலப்பொடி - ஒரு டீஸ்பூன்
  • மில்க் மெய்ட் (விருப்பப்பட்டால்)‍ - 5 டீஸ்பூன்

 

செய்முறை : 
கோதுமையை முன்தினம் இரவே அல்லது 8 மணி நேரம் ஊற வைக்கவும். ( குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் )

மறுநாள் காலை மூன்று முறை அரைத்து பிழிந்து பால் எடுத்து தனியே வைத்து விடவும். கோதுமை பாலும், தண்ணீரும் சேர்ந்து அரை லிட்டர் இருக்குமாறு எடுக்கவும். இதை 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

4 மணி நேரத்திற்கு பின் கோதுமை பாலுடன் சீனி, கலர்பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலை ஊற்றி அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.

கலவை கொதித்து கெட்டியானதும் ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் நெய் பிரிய ஆரம்பிக்கும். அப்போது சிறிது ஏலப்பொடி கலந்து, விருப்ப‌ப்பட்டால் மில்க்மெயிட் சேர்த்து நன்கு கிளறவும்.

நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும்.

வறுத்த‌ முந்திரியை அல்வாவுடன் சேர்த்து கிண்டவும். நெய் பிரிந்த பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும். பிரிந்து வந்த நெய்யை தனியாக வடித்து வைத்து விடவும்.

சுவையான கோதுமை அல்வா தயார். முந்திரி பிஸ்தா தூவி பரிமாறவும்.