பாதாம் பேசன் லட்டு​ : செய்முறைகளுடன்...!

May 25, 2016

தேவையானப் பொருட்கள் :

  • 1. கடலை மாவு - 2 கப்
  • 2. பாதாம் - 10 - 15
  • 3. சர்க்கரை (பொடித்தது) - 1 கப்
  • 4. ஏலக்காய் தூள் - சிறிது
  • 5. நெய் - 1/2 - 3/4 கப்
  • 6. முந்திரி, பாதாம் - சிறிது [விரும்பினால்]


செய்முறை :
 

  • பாதாமை மிக்ஸியில் பொடியாக்கவும்.
  • கடாயில் நெய் விட்டு கடலை மாவு சேர்த்து கை விடாமல் வாசம் வர கிளறவும்.
  • இந்தமாவை தட்டில் கொட்டி, இத்துடன் ஏலக்காய் தூள், பொடித்த சர்க்கரை மற்றும் பொடித்த பாதாம் சேர்த்து கிளறவும்.
  • கலவை நன்றாக கலந்ததும் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சிறிது சேர்த்து கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.