கருப்பட்டி பணியாரம் : செய்முறைகளுடன்...!

May 29, 2016

தேவையானப் பொருட்கள் 

  • பச்சரிசி - ஒரு கப்
  • பொடி செய்த கருப்பட்டி - அரை கப்
  • வாழைப்பழம் - ஒன்று
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - பொரிப்பதற்கு


​செய்முறை :
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பச்சரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் வாழைப்பழம், கருப்பட்டிப் பொடி மற்றும் உப்புச் சேர்த்து கலந்து வைக்கவும்.

இந்த மாவுக் கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் ஊற்ற வேண்டும்.

மெதுவாக ஓரங்களில் வெந்து மேலே எழும்பியதும் பூரி போன்று உப்பலாகி வரும்.

உப்பலாக வந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.

சுவையான கருப்பட்டி பணியாரம் தயார். ஓரங்களில் மொறுமொறுப்பாகவும், நடுவில் மென்மையாகவும் இருக்கும்.