ஸ்பைசி மசாலா வேர்க்கடலை​ : செய்முறைகளுடன்...!

May 31, 2016


தேவையான பொருட்கள் :

  • வறுத்த வேர்க்கடலை – 1 கப்
  • கடலை மாவு – 3 ஸ்பூன்
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • மிளகாய் தூய் – 2 ஸ்பூன்
  • கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
  • ஆம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) – அரை ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கு
  • தண்ணீர் – தேவைக்கு


செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் வேர்கடலையை போட்டு அதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூய், கரம் மசாலா தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கலந்த கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மசாலா எல்லாம் வேர்கடலையில் ஒட்டும்படி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக வைத்து வேர்கடலையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

குறிப்பு :

* வறுத்த அல்லது பச்சை வேர்கடலை எதையும் பயன்படுத்தலாம்.

* தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது. வேர்கடலையில் மசாலா ஒட்டும்படி உதிரியாக இருக்க வேண்டும்.