சிக்கன் பக்கோடா செய்வது எப்படி?

03-06-2016

சிக்கன் பக்கோடாவை எப்படி மிகவும் எளிமையாக செய்வதென்று பார்க்கலாம்.
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள் :

  •  எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
  •  முட்டை - 1
  •  சோள மாவு - 1/4 கப்
  • ,அரிசி மாவு - 1/4 கப்
  • கடலை மாவு - 1/4 கப்
  •   எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  •  ஊற வைப்பதற்கு :
  • மிளகாய் தூள் - 2
  • டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  •  கரம் மசாலா - 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

 செய்முறை :
 * முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


 * பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.


 * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.


* எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!!!