பால் மைசூர்பாகு: செய்முறைகளுடன்...!

June 09, 2016


தேவையானப் பொருட்கள் 

  • கடலை மாவு - ஒரு கப்
  • பால் பவுடர் - ஒரு கப்
  • நெய் - 2 கப்
  • சீனி - 2 கப்
  • தண்ணீர் - ஒரு கப்


செய்முறை :
கடலை மாவையும், பால் பவுடரையும் தனித் தனியாக சலித்து வைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சீனியுடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை சிறுதீயில் வைத்து விட்டு கடலைமாவை சலிக்கியால் ஒரு கையால் பாகில் சலித்து கொண்டு இன்னொரு கையால் கிளறி விடவும்.

பாகில் மாவு நன்றாக கலந்து கெட்டியாக ஆரம்பிக்கும் பொழுது நெய்யை சூடு செய்து மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

நெய்யை ஊற்றி கிளறிய பிறகு பால் பவுடரையும் கடலை மாவு சேர்த்தது போல் சலித்துவிட்டு கிளறவும்.

இப்பொழுது நன்றாக கை விடாமல் கிளறி சட்டியில் உருண்டு வரும் பொழுது எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி சூடாக இருக்கும் பொழுதே வில்லைகள் போடலாம்.

மிகவும் மிருதுவான பால் மைசூர்பாகு தயார்.