சுவையான பன்னீர் புலாவ் : செய்முறைகளுடன்...!

June 14, 2016

தேவையான பொருட்கள் : 

  • பன்னீர் - 250 கிராம், 
  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப், 
  • வெங்காயம் -  ஒன்று 
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
  • பட்டை - சிறிய துண்டு, 
  • கிராம்பு, ஏலக்காய் தலா - 2, 
  • பிரியாணி இலை - ஒன்று, 
  • பச்சை மிளகாய் - 4, 
  • நெய் - ஒரு டீஸ்பூன், 
  • புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். 

* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். 

* பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும். 

* கலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும். 

* மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* சுவையான பன்னீர் புலாவ் ரெடி.