பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் : செய்முறைகளுடன்...!

June 15, 2016

தேவையான பொருட்கள் : 

 • ப்ரளைன் (Praline) செய்ய :
 • சர்க்கரை - 5 தேக்கரண்டி
 • வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
 • முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்தது - 2 தேக்கரண்டி
 • ஐஸ்க்ரீம் செய்ய :
 • அமுல் ப்ரஷ் க்ரீம் மில்க் - 300 கிராம் (இதை குறைந்தது 4 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்)
 • பொடித்த சர்க்கரை (powdered sugar) - அரை கப்
 • ப்ரளைன் (Praline) - தேவையான அளவு
 • பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் கலர் - 2 சிட்டிகை

  செய்முறை: 
  கடாயில் சர்க்கரையைப் போட்டு கரையவிடவும். சர்க்கரை கரைந்து கேரமல் பதம் வரும் வரை சிறு தீயில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையென்றால் நிறம் மாறி தீய ஆரம்பிக்கும்.

  சர்க்கரை நன்கு கரைந்ததும் அதில் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

  அதன் பிறகு பொடித்து வைத்துள்ள முந்திரி பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு கிளறவும். அனைத்து ஒன்றாக கலந்து செட்டானவுடன் அடுப்பை அணைக்கவும்.

  ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையைப் பரவலாகக் கொட்டி, 30 நிமிடங்கள் ஆறவிடவும்

  கலவை ஆறியதும் அதை சுத்தமான துணியில் வைத்து மூடவும்

  அதை சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையை கொண்டு நன்கு தூளாக பொடிக்கவும்.

  பொடி செய்த கலவையை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து தனியாக வைக்கவும். ப்ரளைன் ரெடி.

  ஒரு அகலமான பாத்திரத்தில் க்ரீமை ஊற்றி அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் பொடித்த சர்க்கரையைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

  இரண்டும் ஒன்றாகக் கலந்ததும் ப்ரளைனை சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் மற்றும் மஞ்சள் கலர் சேர்த்து கலக்கவும். (ப்ரளைனை அலங்கரிக்க சிறிதளவு எடுத்து வைக்கவும்)

  எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு அதை ஒரு சிறிய டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.

  ஐஸ்க்ரீம் செட்டானதும் எடுத்து ஐஸ் கப் அல்லது பவுலில் போட்டு மேலே ப்ரளைன் தூவிப் பரிமாறவும்.