சைவ கேக் : செய்முறைகளுடன்...!

June 16, 2016

தேவையான பொருட்கள் : 
 

 • மைதா - 1/4 கிலோ,
 • சர்க்கரை - 200 கிராம்,
 • பால் - 1/4 லிட்டர்,
 • டால்டா அல்லது வெண்ணெய் - 150கிராம்,
 • பேக்கிங் சோடா - 1டீஸ்பூன்,
 • ஆப்ப சோடா - 1டீஸ்பூன்,
 • முந்திரி - 50 கிராம்,
 • தேங்காய் - 1மூடி,
 • கசகசா - 1 மேசைக்கரண்டி,
 • உலர் திராட்சை - 25 கிராம்,
 • கேசரி பவுடர் - 1டீஸ்பூன்.

  செய்முறை: 
   
 • மைதாவை பேக்கிங் சோடா, ஆப்ப சோடா கலந்து, 2 முறை சலிக்கவும்.
   
 • சலித்த மைதாவை டால்டா சேர்த்து பிசைந்து வைக்கவும்.
   
 • சர்க்கரையை பொடித்து வைக்கவும்.
   
 • 5 முந்திரியை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதி முந்திரி, கசகசாவை வெதுவெதுப்பான சிறிது பாலில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
   
 • துருவிய தேங்காய், ஊற வைத்த முந்திரி, கசகசாவை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
   
 • பொடித்த சர்க்கரை சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
   
 • அரைத்ததை பிசைந்த மைதாவுடன் சேர்த்து, கேசரி பவுடர், பால் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கலக்கி, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
   
 • எடுத்த வைத்த முந்திரியை ஒடித்து, திராட்சையும் சேர்த்து, மாவுடன் கலக்கவும்.
   
 • கேக் ஓவனில் டால்டா தடவி மைதாவை லேசாக தூவி தட்டி விட்டு கலந்த மாவை ஊற்றி பேக் செய்யவும். (அனல் மிதமாக இருக்க வேண்டும்).
   
 • கேக் ஓவன் என்றால் திறந்து, ஒரு குச்சியால் குத்தி பார்க்க, ஒட்டாமல் இருந்தால் வெந்ததாக பொருள். (தோராயமாக 10 - 15 நிமிடங்கள் ஆகும்).