பனீர் மஞ்சூரியன்:செய்முறைகளுடன்...!

December,05,2017

தேவையான பொருட்கள்

 • தக்காளி சாஸ் – சிறிதளவு
 • பச்சைமிளகாய் – 3
 • இஞ்சி – அரை அங்குலம்
 • பூண்டு – 10 பல்
 • பெரிய வெங்காயம் – ஒன்று
 • குடமிளகாய் – ஒன்று
 • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
 • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • மரவள்ளிக் கிழங்கு மாவு – 2 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • பனீர் – 200 கிராம்

செய்முறை:

 • முதலில் வெங்காயம், குடமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
 • இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீருடன் மரவள்ளிக் கிழங்கு மாவு, உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
 • ஒரு தோசைக் கல்லில் சிறிது நெய் விட்டு, இதில் ஊற வைத்த பனீர் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
 • இதில் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். வறுத்த பனீரை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பேலியோ பனீர் மஞ்சூரியன் தயார்.