உருளைக்கிழங்கு ஃப்ரைடு ரைஸ்: செய்முறைகளுடன்...!

December 07, 2017

தேவையானவை:

வேக வைத்து தோல் உரித்து சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 2 கப் (எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்),

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் – 1,

நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் – 2 அல்லது 3,

சாதம் – 2 கப்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.

அதில் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கி, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.

அதில் வடித்து வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, இறக்கும்போது வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.