கடலைப்பருப்பு பணியாரம் : செய்முறைகளுடன்

January 09,2018

தேவையான பொருட்கள் :
* அதிகம் புளிப்பில்லாத மாவு – ஒரு கப்
* கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
* வெங்காயம் – ஒன்று
* கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
* எண்ணெய் – தேவைக்கேற்ப
* உப்பு – தேவைக்கேற்ப

 

செய்முறை :
* வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்..

* வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

* மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.

* பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

* சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணியாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.

* பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்.

* சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். கார சட்னியுடன் பரிமாறலாம்.