ஆண்களே உங்கள் அழகு உங்கள் கையில்

03-03-2016

தற்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்கள் அழகின் மீது அக்கறை காட்டுகிறார்கள். அதே சமயம் இயற்கை வழியில் எவ்வாறு அழகை அதிகரிப்பது என்பதிலும் ஆர்வமாக உள்ளார்கள்.

ஒரு ஆண் இயற்கை வழியில் எவ்வாறு அழகாக காட்சியளிப்பது என்பதை மேற்கொண்டு பார்ப்போம். இதைத் தினமும் பின்பற்றினாலே  போதும். உங்கள் பின்னால் பல இளம் பெண்கள் மெய்க்கத் தொடங்கி விடுவார்கள்.

முதலாவதாக அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1L தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள டாக்ஸிசன் வெளியேற்றி சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்.

வாரம் ஒருமுறை முகத்தில் வளரும் தாடியை வழிக்காமல் ட்ரிம் பண்ணலாம். இது உங்கள் முகத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும்.

கோடைகாலம் ஆரம்பிக்கப் போகின்ற நிலைமையில் சன்ஸ்கீரின் உபயோகித்தால் சூரிய கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து கொள்ளலாம். 

முக்கியமாக தினமும்  7 மணி நேர தூக்கத்தை  மேற்கொள்ள வேண்டும். இது கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையத்திலிருந்து நிவர்த்தி பெற்றுத்தரும்.

அதே நேரம் உடல் மட்டுமல்லாமல் உடையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பார்ப்பவர்களைக் கவர முடியும்.

வெளியே செல்லும் முன் 10 நிமிடம் புஷ்அப் செய்யுங்கள் இது உங்களை புத்துணர்ச்சி அடைய செய்வது மட்டுமல்லாமல் உங்கள் உடலை இறுக்கமாகவும் காட்டும்.

பெண்கள் மட்டும்தான் லிப்-பாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தங்களது உதடு வரட்சியடையும் போது இதை உபயோகிக்கலாம். இவ்வாறு உபயோகிப்பதால் பெண்களை கவர முடியும்.

ஒவ்வொரு முறை வெளியே சென்றுவிட்டு வரும்போது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறும்.

மேற்கூறியவற்றை தினமும் செய்து பாருங்கள். உங்களில் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். பிறகு பாருங்கள் உங்கள் பின்னால் எத்தனை பெண்கள் சுற்றுகிறார்கள் என்று. பிறகென்ன தெறிக்கவிடலாமா ஆண்களே !!!! 