நரை முடியை போக்கும் இயற்கை வழிகள்

March 04,2016

இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஓர் பிரச்சினைதான் வெள்ளை முடி. இந்த நரை முடியை மறைக்க பலர் கலரிங் செய்கிறார்கள். ஆனால் இது முடியின் அடர்த்தியை குறைத்து ஆரோக்கியத்தை கெடுக்கும். இது இப்படி இருக்க நாம் எவ்வாறு இயற்கை முறையில் நரை முடியை மாற்றுவது என்பதை பார்க்கலாம்.

 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து மண்டை ஓட்டில் படும்படி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வரவேண்டும்.

 

வெங்காயம்

வெங்காயம் இது முடி உதிர்வதை தடுப்பது மட்டுமல்லாமல் இளம் நரையைப் போக்கும். வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

 

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து தினமும் தலையில்  தடவி வர வேண்டும்.

 

கேரட்

இதனை தினமும் சாற்றாக அருந்தி வர வேண்டும். இதனால் முடி ஆரோக்கியமாகும்.

 

எள்

எள்ளை அரைத்து தலையில் தடவி வந்தாலும் உங்கள் நரை முடி கருமையாக வரும்.