பயணத்தின் போது கொஞ்சமா மேக்கப் போட வேண்டியதன் காரணம் இதுதானாம்...!

April 26, 2016


பயணத்தின் போது எந்த மாதிரியான மேக்-கப் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.

ரெயில், பேருந்து, கார், விமானம் போன்றவற்றில் பயணம் செய்யும் போது, சருமம் பாழாகி விடும். நிறைய பேர் பயணத்தின் போது புத்துணர்ச்சியுடன் இருக்கமாட்டார்கள். மேலும் பயணம் முடிந்ததும், இத்தனை நாட்கள் அழகாக பராமரித்து வந்த சருமம், ஒரே நாளில் பயணத்தால் பொலிவிழந்து போய்விடும்.

அதிலும் பயணத்தின் போது எந்த ஒரு செயலும் செய்யாமல் இருந்தாலும், முகம் புத்துணர்ச்சியின்றி, பொலிவிழந்து காணப்படும். எனவே இத்தகைய பிரச்சனை பயணத்திற்கு பின் வராமல் இருப்பதற்கு, பயணத்தின் போது எந்த மாதிரியான மேக்-கப் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.

பயணம் செய்யும் போது மாசுக்கள் சருமத்தில் படிந்து, முகத்தை பொலிவின்றி, சோர்வாக வெளிப்படுத்தும். எனவே அவ்வப்போது முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்து, அப்போது தூசிகள் சருமத்தில் படிந்து, அதனால் பருக்கள் வருவதையும் தடுக்கும். ஆகவே இவ்வாறு செய்தால், முகம் புத்துணர்ச்சியுடன், பொலிவோடும் பாதுகாப்போடும் இருக்கும்.

பயணத்தின் போது சருமம் அதிகமாக வறட்சியடையும். எனவே அத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு முகத்திற்கு மாய்ச்சுரைசர் தடவிக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் போது முகத்திற்கு ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை சருமத்தை வறட்சியடையச் செய்யும்.

லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், அது நீண்ட நேரம் உதட்டில் இருக்காமல், உதட்டை வறட்சியைடையச் செய்து, உதட்டில் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு பதலாக லிப் கிளாஸ் அல்லது லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. அதுவும் உதடு வறட்சியடைவது போன்று இருக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.

கண்களுக்கு அதிகப்படியான காஜல் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வாட்டர் ப்ரூப் ஐ லைனர் மற்றும் மஸ்காரா பயன்படுத்தலாம். அதுவும் குறைந்த தூர பயணங்களுக்கு மட்டுமே.

பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய செயல்களில் முக்கியமானது தான் கைகளைக் கழுவுவது. மேலும் பயணம் செய்யும் போது கைகளைக் கழுவாமல், முகத்தை தொட வேண்டாம். ஏனெனில் அந்த நேரம் கைகளில் நிறைய பாக்டீரியாக்கள் இருப்பதால், அவை சருமத்தில் மற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.