லெக்கின்ஸ் சர்ச்சை வேண்­டாமே

October 08, 2015
இன்றைய நாகரீக வச­திக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறி­வ­ரு­வதால், அனை­வரும் அதற்­கேற்ற வகையில் ஆடை­களை அணி­யத்­தொ­டங்­கி­வி­டு­கி­றார்கள்.

ஆதி­கா­லத்தில் இலை தழை­களை ஆடை­யாக அணிந்­து­வந்த பெண்கள், அதன்­பி­றகு அந்­தந்த நாடு­களின் கலா­சா­ரத்­துக்கு ஏற்­பவும், தட்­ப­வெட்ப நிலைக்­கேற்­பவும், தங்கள் ஆடை­களை மாற்­றிக்­கொண்­டார்கள்.

தமிழ்­நாட்டில் ஆதி­கா­லத்தில் நமது முன்­னோர்­க­ளான பெண்கள், உடல் முழு­வதும் ஒரே சேலையைக் கட்­டிக்­கொண்டு இருந்­தார்கள்.

அதன்­பி­றகு ஜாக்கெட், உள்­ளா­டைகள் அணியும் பழக்கம் வந்­தது. பின்­னாட்­களில் இளம்­பெண்கள் தாவணி அணிந்­தார்கள். பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்­தது.

பிறகு ஜீன்ஸ்- டீ சர்ட் வந்­தது. ஒவ்­வொரு முறையும் புது நாக­ரீக ஆடைகள் வரும்­போ­தெல்லாம் கடும் கண்­ட­னங்கள் எழு­வது வாடிக்கை.

பழ­மையில் ஊறிப்­போ­ன­வர்­களால் இந்த புது­மையின் மாற்­றத்தை ஏற்­க­மு­டி­ய­வில்லை. இப்­போது பனியன் போன்ற துணி­க­ளா­லான, மெல்­லிய பருத்­தித்­து­ணி­யா­லான ‘லெக்கின்ஸ்’ ஆடையும், மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணி­வதும் வழக்­க­மா­கி­விட்­டது.

ஆண்­டாண்டு கால­மாக சர்க்­கஸ்­களில் பார் விளை­யா­டு­ப­வர்கள் போன்ற கலை­ஞர்கள் வெள்ளை நிறத்தில் இந்த ‘லெக்­கின்சை’ அணிந்து வந்­தனர். ஆனால், இப்­போது வெளியே அணியும் இந்த ‘லெக்கின்ஸ்’ ஆடைகள், நீண்ட நெடும் ஆண்­டு­க­ளுக்கு முன்பே குளிர்­பி­ர­தே­சங்­களில் ஆண்­களும், பெண்­களும் தாங்கள் அணியும் ஆடை­க­ளுக்கு உள்ளே மெல்­லிய கம்­பளி அல்­லது நைலா­னா­லான லெக்­கின்ஸை அணிந்­தார்கள்.

இப்­போது அது பெண்­க­ளுக்­கான வச­தி­யான ஆடை­யா­கி­விட்­டது.

சமீ­பத்தில் சில கல்­லூ­ரி­களில் ‘லெக்கின்ஸ்’ ஆடை அணிந்­து­வ­ரக்­கூ­டாது என்று உடை கட்­டுப்­பாடு தடை­வி­தித்­ததும், சில பத்­தி­ரி­கை­களில் ஆபா­ச­மான ‘லெக்கின்ஸ்’ தேவையா? என்று கட்­டு­ரைகள் வந்­ததும், பெண்கள் மத்­தியில் பெரிய எதிர்ப்பு கிளம்­பி­விட்­டது.

இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும் எல்­லோ­ரு­டைய கண்­க­ளையும் உறுத்­து­கி­றது.

அழகு என்­பது பார்ப்­ப­வர்­களின் கண்­க­ளில்தான் இருக்­கி­றது என்­பார்கள். அது­போ­லத்தான் ஆபா­சமும் பார்ப்­ப­வர்கள் கண்­க­ளில்தான் இருக்­கி­றது.

ஒவ்­வொரு முறையும் பெண்கள் ஆடை மாறும்­போது நிச்­ச­ய­மாக கண்­டன கணைகள் வீசப்­ப­டு­கி­றது.

சுடிதார் வந்­த­போதே இதென்ன சேலை எவ்­வ­ளவு கண்­ணி­ய­மான உடை, அதை விட்­டு­விட்டு சினி­மாவில் போட்­டுக்­கொண்டு வரு­வ­து­போல, இப்­படி ஒரு ஆடை என்­றார்கள். இப்­போது ‘லெக்கின்ஸ்’ வந்­து­விட்­டது.

கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொது­வான கலர்­களில் ‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்­டு­விட்டால் துவைப்­ப­தற்கும் வசதி, இஸ்­திரி போட­வேண்­டிய தேவையும் இல்லை,