அழகாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு...

November 20, 2015

ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  அழகை பராமரிப்பதற்கு கொடுப்பதில்லை.

அழகாக ஸ்டைலாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்  சிறிது நேரத்தை அழகை பாராமரிப்பதற்கும் ஒதுக்கி கொள்ள வேண்டும்.

 பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றித்திரிவார்கள்.

வீட்டுக்கு சென்றதும் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவும். இல்லாவிட்டால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் இட்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் ஊறவிடவும்.

பின்னர் இளஞ்சூடான நீரில் களுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறிவிடும். 

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாற்றுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் களுவவும். இதனால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

சில ஆண்களின் உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். 

உதட்டுக்கு லிப் பாம் பூசினால் உதடும் பாதுகாக்கப்படும்.

எலுமிச்சை சாறு உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

 தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊறிய பின்பு குளிக்க வேண்டும் 

மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ, இதனை காய வைத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம். 

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்க்கவும் இளம் நரை வந்தவர்கள் ஷோம்போ போடுவதை தவிர்க்க வேண்டும்.